Dharmapuri

News June 17, 2024

கறவை மாடுகள் திருடிய 6 பேர் கைது

image

மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி அங்கப்பனின் 2 கறவை மாடுகளை மர்மநபர்கள் நேற்று திருடி சென்றனர். இது குறித்த புகாரில் மாரண்டஅள்ளி போலீசார் முரளிதாஸ்(22), சக்திவேல்(24), அஜித்(23), தனுஷ்(25), முருகேசன்(44), சேட்டு(26) ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கூட்டாக சேர்ந்து பாலக்கோடு பகுதிகளில் கறவை மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 16, 2024

தருமபுரி: குடிநீரை காய்ச்சி குடிங்க மக்களே

image

கர்நாடகா மாநிலம் மற்றும் பெங்களூரில் தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் வரும் மழைநீர் மண் கலந்து கலங்களாக ஒகேனக்கல் பகுதியில் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை நன்கு காய்ச்சி ஆறவைத்து குடிக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News June 14, 2024

தருமபுரி வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டி

image

விழுப்புரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

News June 14, 2024

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு வரும் ஜூன் 21 அன்று காலை 10 மணி முதல் 4 மாலை மணி வரை மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. மேலும் தகவலுக்கு 04342-233088 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News June 14, 2024

தர்மபுரி: ஜமாபந்தி கூட்டம் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் ஜூன் 25ஆம் தேதிமுதல் 28ஆம் தேதி வரை தர்மபுரி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய ஜமாபந்தி கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பட்டா, சிட்டா, பெயர் மாற்றம் ஆகியவை செய்துகொள்ள வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

தர்மபுரியில் பொது ஏலம் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் கழிவுநீக்கம் செய்யப்பட்டு வரும் 21ஆம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் தருமபுரி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் பொதுஏலம் விடப்படுகிறது. எனவே ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்வைப்புத் தொகை வங்கி வரைவு செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

News June 13, 2024

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

இந்திய அரசின் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளுக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையவர்கள் www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 21 என மாவட்ட ஆட்சியர் இன்று(ஜூன் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

தர்மபுரி அரசு கல்லூரியில் 2ஆம் சுற்று கலந்தாய்வு

image

தர்மபுரி அரசு கலை கல்லூரிகளில், 2024-202ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கு 2ஆம் சுற்று மாணவர் சேர்க்கை இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை கல்லூரி கலையரங்கில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.gacdpi.ac.in அறிந்து கொள்ளலாம்.

News June 13, 2024

தர்மபுரியில் விலை உயர்வு

image

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் 1 கிலோ ₹30 ரூபாய் முதல் ₹35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று₹10 முதல் ₹11 ரூபாய் வரை விலை உயர்ந்து, உழவர் சந்தையில் ₹46 ரூபாய் எனவும், வெளி மார்க்கெட்டில் ₹50 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

News June 13, 2024

தருமபுரி: “திமுகவினர் பங்கேற்க வேண்டும்”

image

கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவில், அனைத்து திமுகவினருக்கு பங்கேற்க வேண்டுமென தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவையில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் அனைத்து பங்குபெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!