India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியரை இன்று (அக் 21) நேரில் சந்தித்து, வாழ்த்துபெற்றனர். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகியோர் உடன் இருந்தனர்.
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கலெக்டரிடம் மனுக்களாக வழங்கப்பட்டது.
தீபாவளியின் ஒரு பகுதியாக பலகாரங்களும் இடம்பெறுவது வழக்கம். பலகாரங்களை உற்பத்தி செய்பவர்கள் https://foscos.fssai.gov.in என்ற தளத்தில் உரிமம் பெற்று தகுந்த தரத்துடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தயாரிக்கும் பலகாரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் உணவு பொருள் சம்பந்தமான புகார்களுக்கு 94 44 04 23 22 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சி.சமுத்திரம் தங்கப் பதக்கம் பெற்றார். சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் 18.10.2024 அன்று நடைபெற்ற தமிழக அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பிரிவில் தடகளப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் சாதனை படைத்துள்ளார்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் எஸ்பி அலுவலகத்தில் உள்ள காவலர் வீரவணக்க நினைவு தூணுக்குத் தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஷ்வரன் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கையில் கருப்புப் பட்டை அணிந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட காவலர்கள் பலர் பங்கேற்றனர்,
தர்மபுரி அரசு பட்டுக் கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இம்மாதம் 15 நாளில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில 340 விவசாயிகள் 604 குவியல்லாக 2185 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்தனர். இவை கிலோ463 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 15 நாட்களில் ரூ. 1.13 கோடிக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நேற்று தனது பிறந்தநாள் அன்றே 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பச்சன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சதிஷ்குமார்,ஐஸ்வர்யா தம்பதியரின் மகன் அகிலன். வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த பம்பு செட் மின் மோட்டார் பெட்டியை தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி அருகே சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் இது நீடித்து வருவதால் பொதுமக்கள் சகதியில் நாற்று நட்டு சாலை அமைக்க கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். மேலும், ஊராட்சி தலைவர் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 20) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (அக்டோபர் 21) தர்மபுரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், இன்று(அக்டோபர் 20) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.