Dharmapuri

News July 13, 2024

வங்கி கணக்கில் இருந்து பணத்தை தவற விடாதீங்க!

image

JIO, AIRTEL, VODAFONE, BSNL நிறுவனங்களிலிருந்து சேவை மைய அதிகாரி பேசுவதாக கூறி KYC புதுப்பிக்க அடையாளம் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய சொல்லி, அதன் மூலம் உங்களின் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க நேரிடலாம். ஆகையால் இத்தகைய அழைப்புகளை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று(ஜூலை 12) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 13, 2024

தருமபுரி மாணவன் சாதனை!

image

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் இணை நிறுவனம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தாவரவியல் படிக்கும் மாணவன் கார்த்திக், மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு மருதம் நெல்லி கல்வி குழுமத்தின் சார்பாகவும் கல்லூரி முதல்வர் வாழ்த்து தெரிவித்தனர்.

News July 12, 2024

தருமபுரி: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (12-07-2024) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

தருமபுரியில் 25 மையங்களில் குரூப்-1 தேர்வு

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று(ஜூலை 11) மாலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர், தருமபுரி மாவட்டத்தில் 25 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. 8,314 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

image

தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் நேற்று(ஜூலை 11) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு துளி 2 அதிக பயிர் திட்டத்தில், 1890 நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.2.5 கோடி, நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம், இதர விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது. இதனை சிறு, குறு விவசாயிகள் பெற்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

காணொளி மூலம் திறந்து வைத்து முதல்வர்

image

காரிமங்கலம் வார சந்தை மேம்பாட்டுப் பணிகளான திறந்தவெளிக் கடைகள் மற்றும் பேவர் பிளாக் சாலை ஆகியவற்றை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து காரிமங்கலம் பேரூராட்சி சேர்மன் பி.சி.ஆர். மனோகரன் தலைமையில், துணை சேர்மன் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News July 11, 2024

தருமபுரி மாவட்டத்திற்கு மேலும் 8 புதிய அறிவிப்புகள்!

image

பெரியபட்டி, வெள்ளப்பட்டி, சிட்லிங், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டியில் 6 கோடியே 36 லட்சத்தில் சமுதாயக் கூடங்கள். மொரப்பூர், அரூர் பகுதிகளில் உள்ள 7 குழந்தைகள் மையங்களுக்கு 7 புதிய கட்டடங்கள். கம்பைநல்லூர் மக்கள் பயன்பெற நீரேற்று குழாய். பேருந்து நிலையம் அருகே புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி. அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தார்ச்சாலை பணிகள் புதுப்பித்தல். வரட்டாறு, காட்டாற்று ஓடை குறுக்கே புதிய பாலம்.

News July 11, 2024

தருமபுரி: முதல்வர் வெளியிட்டு புதிய அறிவிப்புகள்

image

முதல்வர் வெளியிட்ட 7 புதிய அறிவிப்புகள்: 51 கோடியில் அரூர் அரசு மருத்துவமணை தரம் உயர்த்தல். தருமபுரி-வெண்ணம்பட்டி சாலையில் புதிய ரயில் மேம்பாலம். மோபிரிபட்டி-தொட்டம்பட்டி இணைத்து அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தல். பஞ்சப்பள்ளி,ராஜபாளையம் அணைக்கட்டுகள் புனரமைத்தல். சிட்லிங், அரசநத்தம் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி சாமை, வரகு மதிப்பு கூட்டு பொருளாக்க கிடங்கு. தீர்த்தமலையில் துணை வேளாண்மை மையம்.

News July 11, 2024

அரசுப் பள்ளி வகுப்பறைகளை புதுப்பிக்க முதல்வர் உத்தரவு

image

நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட பாளையம்புதூர் அரசு பள்ளியில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி நடைபெற்ற பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழமை வாய்ந்த 4 வகுப்பறைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. அவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 11, 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

image

தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவைகள், பொது மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!