India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி மக்களையும் சிறு தொழில்களையும் அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் தருமபுரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இன்று தர்மபுரி நகரில் பேருந்து பிரச்சாரம் மற்றும் கடைவீதி பிரச்சாரங்கள் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.3.82 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். உடன் முன்னாள் படைவீரர் நல அலுவலர் (பொ) திருமதி. பிரேமா உள்ளார்.
பாஜக அரசை கண்டித்து வருகின்ற 27ஆம் தேதி காலை 10.00 மணி அளவில் தருமபுரி BSNL அலுவலகம் அருகில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கிளை கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு திமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள பல்வேறு பெண்களின் பாலினத்தை சட்ட விரோதமாக கண்டறிவதற்காக, சட்ட விரோத கும்பல், பெண்கள் அனைவரையும் தர்மபுரியிலிருந்து பெரம்பலூருக்கு கொண்டு சென்றனர். அங்கு கருவின் பாலினத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். தகவல் அறிந்த தர்மபுரி சுகாதாரத்துறை இணை இயக்குநர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் மர்மகும்பலை பெரம்பலூர் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.
தர்மபுரி மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குநர் மதியழகன் இன்று(ஜூலை 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால் அதிக முளைப்புத்திறன், சீரான பயிர் வளர்ச்சி, ஒரே நேரத்தில் அறுவடை மற்றும் கலப்படமில்லாத அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நேற்று(ஜூலை 24) தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்டத்தைச் சேர்ந்த பல பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை வழங்கினர். இதில் மொத்தம் 79 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக 79 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மாலை 04.30 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மக்களின் 80 ஆண்டு கனவு திட்டமான, தர்மபுரி – மொரப்பூர் ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்த ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், மாவட்ட மக்கள் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். மத்திய அரசு மாநில அரசும் நடவடிக்கை எடுத்து, அடுத்த பட்ஜெட்டிலாவது தர்மபுரி-மொரப்பூர் ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் அரண்மனையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், ஆகிய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளோடு, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் திருமால்வளவன் கட்சியின் வளர்ச்சி பணி குறித்து ஆய்வு செய்தார். மேலும், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.