Dharmapuri

News July 28, 2024

சிறுபான்மையினருக்கு தொழில் கடன் வழங்கும் முகாம்

image

தருமபுரி மாவட்ட சிறுபான்மையினருக்கு தொழில் கடன் வழங்க வட்டார அளவில் முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்தவர்களுக்கு தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதில் தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கான தேர்வு

image

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாளை(ஜூலை 29) காலை 10 மணி முதல் 3 மணி வரை கால்நடைகளுக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கான பணி தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தகுதி உடைய ஓட்டுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ், ஓட்டுனர் சான்றிதழ், பிற அசல் சான்றிதழ் உடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

image

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 27, 2024

108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு

image

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிவதற்கு ஓட்டுனர் (ம) அவசர உதவியாளர் பணிக்கு தேர்வுகள் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வில் தகுதி உடைய நபர்கள் அவருடைய தகுதி சான்றிதழ்கள், ஓட்டுனர் உரிமைச் சான்றிதழுடன் நேரில் கலந்து கொள்ளவேண்டும். மேலும், விவரங்களுக்கு 91542, 51541 91542, 51538 என்ற எண்ணை அழைக்கலாம்.

News July 27, 2024

தர்மபுரியில் பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

image

தர்மபுரி திமுக ஒருங்கிணைந்த மாவட்ட சார்பில் பாஜக அரசை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(ஜூலை 27) நடைபெற்ற வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன், இன்பசேகரன் கண்டன உரையாற்றி வருகிறனர். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News July 27, 2024

தாவரப் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

image

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று(ஜூலை 27) வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேம்பு, நொச்சி, ஆடாதோடை அரளி, புங்கம், இலுப்பை உள்ளிட்ட தாவரங்கள் சிறந்த பூச்சிக்கொல்லிகள் தன்மையினை பெற்றுள்ளதால் பயிர்களை தாக்கும் அங்கக பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றை பயன்படுத்தி விவசாயிகள் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு இலவச பட்டப்படிப்பு

image

தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் பல்கலைக்கழகங்களில் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கல்லூரி நிர்வாகமே முழு செலவினத்தையும் ஏற்று மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி படிப்பதற்கு வழிவகை செய்து தருவதால் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட மு. படை வீரர்கள் நல அலுவலகத்தை அணுகுமாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார் .

News July 27, 2024

தருமபுரிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவான 52 அடிகளில் தற்போது அணை 51 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்க வேண்டுமாறு அறிவுத்தப்படுகிறது.

News July 26, 2024

இலவச கண் சிகிச்சை முகாம்

image

தர்மபுரி ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் 03/08/2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 2.00 மணி வரை ரோட்டரி சங்க அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 26, 2024

காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 92,000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தர்மபுரி  மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!