India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மற்றும் கால்நடைகள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றோருக்கு, 108 மாவட்ட மேலாளர் திரு ரஞ்சித் அவர்கள் பணி ஆணை வழங்கினார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அருள், தினேஷ்குமார், பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மத்திய பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது நகர வளர்ச்சியாலும், அதிகமான பேருந்து இயக்கத்தாலும் வெளியூர் செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். அரசு புதிய பேருந்து நிலையத்தை ஏற்படுத்த வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்துகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் குருதி கொடை திட்டத்தை முன்னெடுத்துச் சென்று கடந்த 15 ஆண்டுகளாக பல நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய பெ.ஆதிமூலம் அரும்பணியை பாராட்டி ஆஸ்பா பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. இண்டூருக்கு வருகை தந்தவருக்கு இன்று பேருந்து நிலையத்தில் பொது மக்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஸ்டீபன் ஜேசுபாதம், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான
வாராந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்றுதொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உட்பட அரசு அலுவலர்கள் இருந்தனர்
தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் இன்று(ஜூலை 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில், தென்னை நார் கழிவு, தழைச்சத்து மூலப்பொருட்களை 4 அடி உயரத்திற்கு எழுப்பி இந்த குவியலை 15 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். இவை மட்க வைத்தலுக்கு உதவும், மண்ணில் சத்துக்கள் நிலை நிறுத்தப்பட்டு பயிர்களுக்கு கிடைத்து மகசூல் அதிகரிக்க உதவியாக இருக்குமென தெரிவித்துள்ளார்.
தர்மபுரி ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும் முன்னாள் படைவீரர்கள் தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை நேரில் அணுகி விவரம் பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் உள்ள பிரபல ஹோட்டல் கடையில் முகமது ஆசிப் என்பவர் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தங்கையின் காதல் பிடிக்காததால் அவரின் சகோதரர்கள் கடைக்குச் சென்று அவரை கொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பெண்ணின் இரட்டை சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வருகின்ற 2.8.2024 அன்று ஒகேனக்கல்லில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1,60,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதை நேரில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று களஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.