Dharmapuri

News August 2, 2024

6 மாதத்தில் 113 போக்சோ வழக்குகள் பதிவு

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கூறியதாவது; மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் 113 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 126 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 11 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News August 1, 2024

பழங்குடி மக்களின் கணக்கெடுப்பு பணி தொட்ங்கியது

image

நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, இருளர் கொட்டாய் பழங்குடியினர் பகுதியில் தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி 20 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

News August 1, 2024

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு

image

புதுடில்லியில் மத்திய அமைச்சர் அலுவலகத்தில் சுற்றுலாத் துறை மத்திய அமைச்சர்
ஶ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத்தை, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி இன்று சந்தித்தார். இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினார்.

News August 1, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் அதிகரிப்பு

image

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 9.30 மணி அளவில் 10,000 கன அடி தண்ணீர் அதிகரித்து வினாடிக்கு 1,80,000 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. தற்போது 2 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 1, 2024

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

image

மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம் நேற்று நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து 74 மனுக்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் காவல் ஆய்வாளர்கள் காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 1, 2024

வேளாண் அமைச்சருக்கு வரவேற்பு

image

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அரசு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் இன்று சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். இவரை தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அமைச்சருக்கு வரவேற்பளித்தார் .

News August 1, 2024

பணம் வைத்து சூதாடிய 13 நபர்கள் கைது

image

நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட இண்டூர் காவல் நிலைய காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது நாகர்கூடல் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 6 நபர்கள் மற்றும் பஞ்சப்பள்ளி ராமன் கொட்டாய் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 7 நபர்களை இண்டூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.56,000 பறிமுதல் செய்யப்பட்டது.

News July 31, 2024

சென்னை மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

image

பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு ஒருமுறை அப்போலோ மருத்துவமனையில் அவர் வழக்கமாக சிகிச்சை பெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

News July 31, 2024

 பயிர்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி

image

நடப்பாண்டு காரிப் பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல், சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு இன்று(ஜூலை 31) காப்பீடு செய்ய கடைசி நாளாகும். ஏக்கருக்கு நெல்லுக்கு 742 ரூபாயும், சோளத்திற்கு ஏக்கருக்கு 196 ரூபாயும் , நிலக்கடலைக்கு ஏக்கருக்கு 426 ரூபாய் செலுத்தி காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்படலாம் என வேளாண் இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

காலை உணவு திட்ட செயல்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை

image

தர்மபுரி ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாவட்டத்தில் 1,132 பள்ளிகளை சேர்ந்த 53,363 பேர் காலை உணவின் மூலம் பயனடைந்துள்ளனர். மேலும், காலை உணவு திட்டத்தை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவில், வட்டார அளவிலும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காலை உணவு திட்டம் செயல்பாடானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!