Dharmapuri

News August 7, 2024

மகளிர் சுய உதவிக்குழுவுடன் ஆட்சியர் ஆலோசனை

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குதல், வங்கி இணைப்பு சாதனைகள் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்தூர் முகம்மது நசீர், உதவி திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

News August 7, 2024

தர்மபுரியில் இரவு 10 மணிவரை மழை

image

தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 25 மாவட்டத்தில் இன்று இரவு10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2024

தர்மபுரியில் இரவு 7 மணிவரை மழை

image

தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2024

மண் வளத்தை கண்டறிய 74, 000 விவசாயிகள் ஆர்வம்

image

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மபுரி மாவட்டத்தில் மண்வளப் பரிசோதனை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 74,000 விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் மாதிரியை மண்வள பரிசோதனை செய்துள்ளனர். மேலும் 1,40,000 விவசாயிகள் தங்களது நிலங்களில் மண் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

தமிழ்புதல்வன் திட்டம் குறித்து ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் தருமபுரி கலெகடர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசுகையில்; மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைத்தல், நீண்ட நாட்களாக பரிவர்த்தனை முடங்கிய கணக்குகளை புதுப்பித்தல் பற்றி ஆய்வு மேற்கொள்ள எடுத்துரைத்தார்.

News August 6, 2024

மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

தர்மபுரி அருகே குண்டலப்பட்டி ரஞ்சிதம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வரும் 8ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமென மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமானஅன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 6, 2024

அரசு அங்காடியில் ரூ.16 லட்சத்திற்கு பட்டுக் கூடுகள் விற்பனை

image

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3,754 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக கிலோ 523 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கிலோ 231 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 435 ரூபாய்க்கும் என மொத்தமாக ரூ.16,33,110 பட்டுக்கூடுகள் விற்பனையானது.

News August 6, 2024

தருமபுரி மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் 503 மனுக்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து நேற்று மனு வழங்கினர். இதில் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 503 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News August 6, 2024

பயிற்சியாளராக விண்ணப்பங்கள் வரவேற்பு

image

SDAT மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்கு உட்பட்ட தடகள வீரர் வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி மாவட்ட பிரிவு அலுவலகத்தில் இலவசமாக இன்று முதல் ஆக 12 வரை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆக 19ம் தேதி மாலை 5-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News August 6, 2024

காரிமங்கலத்தில் கருணாநிதி நினைவு தின அமைதி ஊர்வலம்

image

முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாளை காலை 10 மணியளவில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தொடங்குகிறது. இதற்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய உறுப்பினர்கள், பேரூர், கிளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!