India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்க்கு 8 – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று,18 வயது நிறைந்து சமைக்க தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் நவ.17-குல் <

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். வயது வரம்பு: OBC/BCM: 18-34, SC/ST:18-37, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வுகள் உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.9 இந்த <

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க’

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று (நவ.01) இரவு விநாடிக்கு 8000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று (நவ.02), ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 6500 கனஅடியாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மழைபெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டம், தி.மு.க எம்.பி.மணி இல்ல திருமண விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று (நவ.3) தருமபுரிக்கு வருகிறார். சென்னையிலிருந்து தனி விமானத்தில் இன்று காலை, 9:00 மணிக்கு சேலம் வந்தடைந்து, பின் சாலை மார்க்கமாக தருமபுரிக்கு வருகிறார். இந்நிலையில், தருமபுரி எஸ்.பி.மகேஷ்வரன் தலைமையில், 650 போலீசார் முதலவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.02) இரவு 9 மணி முதல் இன்று (நவ.3) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. குணவர்மன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

தருமபுரி நகரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான 5வது மாவட்ட மாநாடு இன்று (நவ.02) தொடங்கியது. இந்த மாவட்ட மாநாடு நவம்பர் 2 மற்றும் 3, என இரண்டு நாள் நடைபெறும். மாநாட்டின் முதல் நாளான இன்று பேரனை நடைபெற்று ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பின் பொதுமக்களும் இந்த பேரணிக்கு ஆதரவு அளித்தனர்.

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

தருமபுரி மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
Sorry, no posts matched your criteria.