India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட செய்தியாளர் சன் டிவி A.குமரவேல் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள பத்திரிக்கையாளர் அறையில் தருமபுரி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள், செய்தியாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி தருமபுரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்தும் ஆக.16ஆம் தேதி காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், உதவி ஆணையர் நர்மதா, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானுசுஜாதா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் பெற்றோரை இழந்த பாட்டியுடன் வசித்து வரும் பிரதிக்ஷா என்பவரின் தொடர் சிகிச்சை பரிசோதனைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 10,000 தபால் நிலைய கிசான் விகாஸ் டெபாசிட் பத்திரத்தை கலெக்டர் நேற்று அவரது பாட்டியிடம் வழங்கினார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான 2024 -2025 ஆம் ஆண்டிற்கு முதலமைச்சர் உலக கோப்பை போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்ட தலைவர், செயலாளர் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தொகுதி செயலாளர்,தலைவர், மகளிர் சங்க செயலாளர், தலைவர் நியமனம் செய்வது சம்மந்தமாக அவசர ஆலோசனைக் நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டார்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு 1 மணி வரை தருமபுரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து இன்று மனு வழங்கினர். இதில் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 610 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் சார்பாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார். இதில், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.