India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரியில் உள்ள கலை அறிவியல், பொறியியல், தொழில் படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 17,000 மாணவிகள் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் மாணவிகள் உயர் கல்வியில் சேரும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழ்புதல்வன் திட்டத்தில் 68 கல்லூரிகளில் பயலும் 6339 மாணவர்களும், நான் முதல்வன் திட்டத்தில் 58,676 மாணவர்களும் பயன் பெற்றுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதிகளில் கரும்பு தோட்டங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதால் அறுவடை நடைபெறவில்லை. எனவே, ஈரப்பதம் குறைந்தவுடன் அறுவடை பணி தொடங்கும். அதன் பின் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்கப்படும் என்றும், நடப்பாண்டில் 1.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரியில் மரவள்ளிக்கிழங்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்தல், சொட்டுநீர் பாசன வழி வழங்கும் உரங்களின் விலையினை கட்டுப்படுத்த தற்போது வழங்கப்படும் ரசாயன இனத்திலிருந்து உரங்கள் இனத்திற்கு மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் பதிவு செய்தனர். இந்தக் கோரிக்கைகளை அரசிற்கு கருத்து உருவாக அனுப்பப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி (டிச. 20) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அளவில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு எழுதினர். இதன் முடிவில் 2024ம் ஆண்டு தர்மபுரி அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதற்கு கடின உழைப்பு நல்கி பயிற்றுவித்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வில் 11ஆம் வகுப்பு பயிலும் கீர்த்திகா, ஷாலினி, பிரதாப் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.1500 தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராசு ஆசிரியர் செந்தில் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து முதற்கட்டமாக 5,000 ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வந்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (20.12.2024) பார்வையிட்டார். உடன் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் ராஜராஜன் இருந்தனர்.
தமிழ்நாடு நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண் அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் விவரம்; காலை 9:30 காரிமங்கலம் அறிவுசார் மைய புதிய கட்டிடத்தை திறந்து வைக்கின்றனர், காலை 10 மணிக்கு காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 11 மணிக்கு தர்மபுரி மதுரபாய் திருமண மண்டபத்தில் புது தொழில் கண்காட்சியை துவக்கி வைக்கின்றனர்.
தர்மபுரி தொழில் மற்றும் ஸ்டார்ட்-அப் கண்காட்சி 2024 நாளை (டிசம்பர் 21) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 22) ஆகிய இரு நாட்களில் தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தொழில் நிறுவனங்கள், தொழில் கண்காட்சி மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள், தொழில் தொடங்குவோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி வழியாக ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் ஜனவரி மாதம் 4ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை தென்னக ரயில்வே நீட்டித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ராமேஸ்வரம் புனித பயணம் செய்ய ஹூப்ளி ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை பயன்படுத்தி வந்தனர். சிறப்பு ரயில் சனிக்கிழமை தர்மபுரி வழியாக சென்று, ஞாயிற்றுக்கிழமை வரும். தற்போது இந்த சேவை நீட்டிப்பால் ஆன்மீக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (டிச.20) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், ஐடிஐ கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் விற்பனையாளர், மார்க்கெட்டிங் உட்பட பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.