India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொம்மிடி அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரது மனைவி ஹரிதேவி (24 ) தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களின் உடலை மீட்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர் அருகே உள்ள கீழ்மொரப்பூரைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தை இருவர் காதலித்து வந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உட்பட சிலர் காதலனின் தாயை கடத்தி சென்று துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அது முற்றிலும் தவறு என்று தெரியவந்துள்ளது. மேலும், இது போன்ற பொய்யான ஆதாரமற்ற தகவல்களை பதிவிடவும், பகிரவும் வேண்டாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தருமபுரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெறுகிறது. எனவே தருமபுரி சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களின் குறைகளையும், கருத்துக்களையும், எடுத்துரைத்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அழைப்பு விடுத்துள்ளார். சேர் செய்யவும்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாபெரும் முன்னோடி வங்கி இணைந்து கல்வி கடன் வழங்கும் முகாமை நேற்று நடத்தியது. இதில் ஆட்சியர் சாந்தி பங்கேற்று 22 பேருக்கு ரூ. 2 கோடியே 67 லட்சத்திற்கு கல்வி கடனை வழங்கினார். மேலும், 2024 – 2025ஆம் நிதி ஆண்டில் 1,568 பேருக்கு சுமார் ரூ. 22.4 கோடி அளவில் கல்வி கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியினை தலைவர் விஜய் நேற்று பனையூரில் கொடி ஏற்றி துவங்கி வைத்தார். தர்மபுரி விவசாய ஒன்றிய அணி சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி நேற்று கொண்டாடினர். இதில் மாவட்ட செயலாளர் தாபா சிவா அறிவுறுத்தலின்படி விவசாயி அணி தலைவர் முத்துக்குமார், ஒன்றிய தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் கடந்த 12ஆம் தேதி சிங்கேரி அருகே சட்டவிரோதமாக கருவில் பாலினம் கண்டறியும் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை சுகாதாரத்துறையினர் பிடித்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் (45), சின்னராஜ் (29), இலக்கியம்பட்டியை சேர்ந்த கற்பகம் (39) ஆகிய மூவரும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரியில் 2024-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள், பொதுப் பிரிவு அகிய பிரிவுகளில் செப்டம்பர் மாதங்களில் நடைப்பெற உள்ளது. மாவட்ட அளவிலான முதலமைச்சர் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு https://sdat.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக முன்பதிவு செய்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய கூறப்பட்டுள்ளது.
தருமபுரியில் சட்ட விரோதமாக கருவிலேயே பாலினம் கண்டறிந்து கூறும் கும்பலை சேர்ந்தோர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்றும் இவ்வாறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் 3 மாதங்களில் 3 கும்பலை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(ஆக 23) முற்பகல் 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயனடையலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார். சேர் செய்யவும்.
தருமபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01/01/2011 முன்னர் கட்டப்பட்ட அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு வரைமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01/08/2024 முதல் 31/01/2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, www.tcp.org.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.