India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்கள், 2008ல் தொடங்கி, 17 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் எவ்வித வசதிகளுமின்றி செயல்பட்டு வருகிறது. வருவாய் துறை மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டும், இதுவரை கட்டிடம் கட்டாததால். அதனால் வக்கீல்கள் நேற்று(நவ.03) கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

தருமபுரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. தர்மபுரியில் மட்டும் 21 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (03.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் அரிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் சரவணன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (நவ.3) தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி எம்.பி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பிரகதீஸ்வரன் – மது பிரதிக்சா ஆகியோரின் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து, மணமக்களை வாழ்த்தினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (நவ.3) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)கவிதா, மகளிர் திட்ட இயக்குநர்அ.லலிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பயர்நத்தம் கிராமத்தை சேர்ந்த வீரபத்திரன் (60) மற்றும் சென்யைன் (60) இன்று நவ.3 பைக்கில் பாப்பிரெட்டிப்பட்டி யில் இருந்து பையர்நத்தம் சென்றுள்ளார். தேவராஜபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதி வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த சென்னையன் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.03) தருமபுரி மாவட்டம், அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம் 1,733 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடைபெற்று வரும் உட்புறசாலைகள், மழைநீர் வடிகால் மழைநீர் வடிகால் போன்ற உட்கட்டமைப்பு பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.
Sorry, no posts matched your criteria.