Dharmapuri

News November 19, 2024

தர்மபுரி மாவட்டத்தில் 336 போக்சோ வழக்குகள் பதிவு

image

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், குழந்தை திருமணம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 165 போக்சோ வழக்குகளும், ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2024 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்பபம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 171 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் சாந்தி அறிக்கையில் நேற்று   தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

தருமபுரி மருத்துவமனைக்கு ஆட்சியர் உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில் மகப்பேறு மரணம் நிகழ்ந்த மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகு அம்மருத்துவமனையின் தரம் Level3-ல் இருந்து Level2ஆக தரயிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அம் மருத்துவமனையில் (Complicated High Risk) தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கக்கூடாது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவின்பேரில் நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 19, 2024

சுடுகாடு காணவில்லை என கிராமமக்கள் ஆர்பாட்டம்

image

பென்னாகரத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் முதுகம்பட்டி சாலையில் உள்ள இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர். சுடுகாட்டின் அருகில் உள்ள விளைநிலத்தில் வீட்டுமனை கட்ட சமன் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சுடுகாட்டு பகுதியை இடித்துள்ளார். இதனால் ஆந்திரமடைந்த மக்கள் தங்களது சுடுகாட்டை மீட்டு தரகோரி நேற்று பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News November 18, 2024

தருமபுரி ஆட்சியர் எச்சரிக்கை 

image

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் கட்டாய திருமணம், பாலியல் வன்கொடுமை போன்ற குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர் மீது கட்டாயம் போக்சோ வழக்குகள் பதியப்படும். குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனடியாக சைல்ட் ஹெல்ப்லைன் 1098 என்ற எண்ணிற்கு புகார் அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

News November 18, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 527 மனுக்கள்

image

தருமபுரியில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 527 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News November 18, 2024

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம்,பென்னாகரம் சுஞ்சல்நத்தம், எம்.தண்டா கிராமத்தில் வசித்து, சர்க்கஸ் தொழில் செய்து வரும் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், கவிதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

News November 18, 2024

 பட்டன் ரோஸ் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

image

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பொழியும் மழையின் காரணமாக பட்டன் ரோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது கோவில் திருவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள் நடைபெற உள்ளதால் விற்பனை சூடு பிடித்துள்ளது. நேற்று(நவ 17) ஒரு கிலோ பட்டன் ரோஸ் 800 ரூபாய்க்கு விற்பனையானதால் பட்டன் ரோஸ் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டன் ரோஸ் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி நடைபெறுகிறது.

News November 17, 2024

தருமபுரியில் விஜய் போட்டி?

image

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனை கூட்டத்திற்கு பின் த.வெ.க கட்சியின் மாவட்ட தலைவர் சிவா இந்த தகவலை தெரிவித்துள்ளார். தருமபுரி மக்களே உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT

News November 17, 2024

தருமபுரி அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

image

தருமபுரியில் நேற்று நடைபெற்ற வாக்காளர்கள் சிறப்பு முகாமிற்கு, வாக்காளர் பட்டியல் பார்வையாளரான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் ஆணையர் ஆனந்தகுமார் வருகை புரிந்தார். மேலும், அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்டியலில் உள்ள எந்தவொரு பெயர்களையும் நீக்க கூடாது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்றார்.

News November 16, 2024

தர்மபுரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூகவலைத்தளங்களில் Chat செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உரையாடலை பதிவு செய்து அச்சுறுத்த பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற புகார் ஏதேனும் இருப்பினும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். மேலும், சைபர் கிரைம் தொடர்பு எண்; 1930 மூலம் புகார் அளிக்கலாம் என தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.