Cuddalore

News March 13, 2026

கடலூர் பள்ளி வேன் விபத்து – நீதிமன்றம புதிய உத்தரவு!

image

கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் மூடாத‌தால் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் பலியாகினர். இந்த நிலையில் கேட் கீப்பர் பங்கஜ்குமாருக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் குரல் பரிசோதனை செய்ய வேண்டும் என சிதம்பரம் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News March 13, 2026

கடலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

கடலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News March 13, 2026

கடலூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

கடலூர் மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

வேலைவாய்ப்பு: கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இன்று (13.03.2026) காலை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர்: வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை குறைதீர் முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (14.3.2026) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்களிலும் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News March 13, 2026

கடலூர்: பேருந்து நிறுத்தத்தில் கிடந்த சடலம்

image

கடலூர் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரித்த போது, அவர் கடலூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலைசெல்வம் (56) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், கலைசெல்வம் எப்படி இறந்தார் என தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

News March 13, 2026

கடலூர்: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

சேத்தியாதோப்பு அடுத்த சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் வினோத் (27). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சேத்தியாதோப்பு நோக்கி சென்ற போது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 12, 2026

கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

error: Content is protected !!