India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினம் (1.05.2025) அன்று காலை 11 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி பொது நிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
நம்ம கடலூர் மாவட்டத்தின் பயோடேட்டா பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்: தலைநகரம் : கடலூர், மாநகராட்சி-1, நகராட்சி-5, வருவாய் கோட்டம்-3, வட்டங்கள்-10, பேரூராட்சிகள் 14, ஊராட்சி ஒன்றியங்கள் 14, ஊராட்சிகள் 683, வருவாய் கிராமங்கள் 883, சட்டமன்றத் தொகுதிகள் 9, பரப்பளவு மொத்தம்: 3703 ச.கி.மீ, நகர்புறம்: 460 ச.கி.மீ, கிராமப்புறம்: 3244 ச.கி.மீ. ஆகும். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..
கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மின் தொடர்பான புகார்களை இந்த எண்களில் அளிக்கலாம். அவை: கடலூர்:04142 223793, சிதம்பரம்:04144 222020, விருத்தாச்சலம் 04562-240009, புவனகிரி:04328 224055, குள்ளஞ்சாவடி:04142 279231, பண்ருட்டி:04142-246428, குறிஞ்சிப்பாடி:04142-258243, சேத்தியாத்தோப்பு:04144-244223, ஸ்ரீ முஷ்ணம்:04144-245239, பெண்ணாடம்:04143-222222. தெரியாதவர்களுக்கு SHAREசெய்து உதவுங்க..
உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <
விருதாச்சலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் லிப்ட் கொடுத்தனர். பாதி வழியில் இறங்கி இவரை தாக்கி பணம், செல்ஃபோனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் நேற்று பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
Sorry, no posts matched your criteria.