India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பயிலும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (ஆக.15) நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையார் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

கடலூர் மக்கள் கட்டாயம் செல்ல வேண்டிய மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள்:
▶புது வண்டிபாளையம் சுப்பிரமணியர் கோயில்
▶திருமாணிக்குழி ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில்
▶ பரங்கிப்பேட்டை முத்துக்குமரசுவாமி கோயில்,
▶மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
▶ வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில்.

கடலூர் மக்களே. நம் பகுதிகளில் சில சமையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 04142-234035 என்ற எண்ணில் புகாரளியுங்கள். மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளியுங்கள். SHARE IT!

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’47’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இன்று (ஆக.14) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து பெறலாம். SHARE IT NOW!

கடலூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமம் அருகேயுள்ள கடற்பகுதியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை இயக்குனர் கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9486793372) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.