India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (30/08/2025) இரவு கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டது. அவரச காலத்தில் பொதுமக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.

கடலூர் மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <

கடலூர், இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <

கடலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.30) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.மண்டபம், மன்மத சாமி கோயில் தெரு, சிதம்பரம், வேலன் திருமண மஹால் கங்கைகொண்டான், பேரூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கண்ணாரபேட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெத்தநாயக்கன் குப்பம், அரசு உயர்நிலைப் பள்ளி, ஆயங்குடி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 3,632 டன்னும், டி.ஏ.பி 2,581 டன்னும், பொட்டாஷ் 1,492 டன்னும், காம்பளக்ஸ் உரம் 6,628 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,418 டன்னும் என மொத்தம் 15,751 டன் இருப்பு உள்ளது. மேலும், விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க <

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.30) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், தேவனாம்பட்டினம், செம்மண்டலம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, பெண்ணாடம், பண்ருட்டி, தட்டாஞ்சாவடி, திருவதிகை, விருத்தாசலம், ஆலடி, கருவேப்பிலங்குறிச்சி, முதனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த விவசாய பொருட்கள் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நேற்று(ஆக.29) பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி காந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கதிரேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.29) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் தனியார் பள்ளியில் நடைபெற இருந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அவசர நிர்வாக காரணங்களின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.