Cuddalore

News January 31, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.,31) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பொன்மகரம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சங்கர், பண்ருட்டி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2025

கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவிப்பு

image

தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஜி.கோகுல் என்பவரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நியமனம் செய்தார். இந்த நிலையில் த.வெ.க கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட கோகுலுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 31, 2025

கடலூர்: நாளை பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும்! 

image

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, அலுவலகங்களுக்கும். 13.01.2025 அளிக்கப்பட்ட ஆருத்ரா தரிசன உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக நாளை 01.02.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களும் நாளை (01.02.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

News January 31, 2025

கடலூர் மாவட்டத்தில் 19,916 மெட்ரிக் டன் உரங்கள்  

image

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 8 ஆயிரத்து 787 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 1,885 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3 ஆயிரத்து 624 மெட்ரிக் டன்னும், காம்பளக்ஸ் உரம் 4 ஆயிரத்து 607 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,014 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 19 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 31, 2025

ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் இன்று (31.01.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கோமதி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கதிரேசன் உட்பட பலர் உள்ளனர்.

News January 31, 2025

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்

image

ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்த வட்டம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பு இருந்து வருவதை அகற்றக் கோரி சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News January 31, 2025

கடலூர்: ஒரே ஆண்டில் 145 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு

image

கடலூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு ஜனவரி (2024) மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வருவோரை கணக்கெடுப்பு நடத்தியதில் புதிதாக 145 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது என கடலூர் மருத்துவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

கடலூர்: பணி நிறைவு பாராட்டு விழாவில் ஆட்சியர் பங்கேற்பு

image

கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர் இன்று (31/01/2025) பணி நிறைவு பெறுகிறார். இதனை முன்னிட்டு, இன்று மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி ஜவகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, கடலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், எஸ்.பி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

News January 31, 2025

வடலூர்; 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் 11.2.2025 அன்று நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் சேலம், சென்னை ஆகிய வெளிமாவட்டங்களில் இருந்தும், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இயக்கப்படுகிறது.

News January 30, 2025

கடலூர்: விவசாயிகளை வெளியேற்றக் கூடாது என ஐகோர்ட் அறிவிப்பு

image

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலையடிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு எனக்கூறி விவசாய நிலங்களில் உள்ள விவசாயிகளை வெளியேற்றக் கூடாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கு பட்டியலிட்டு விசாரிக்கப்படும் வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!