India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன் (35). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராமல் மரத்திலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்த மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கிராமங்கள், குக்கிராமங்களுக்கு பேருந்து சேவையை வழங்கும் நோக்கில் பேருந்து வசதி இல்லாத கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மினி பேருந்து இயக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பான வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட பாஜக சார்பில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்து சிதம்பரம் பேருந்து நிலையம், குமாராட்சி கடைவீதி, வேப்பூர் கூட்டுரோடு ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 51 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
கடலுார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ. 5.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கடலூர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, மனுக்கள் பெற்றார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ளது புவணாம்பிகை உடனுறை பூலோகநாதர் திருக்கோயில். இக்கோயிலில் வழிபடுவதால் பதினாறு விதமான தோஷங்களை நீங்கும். மேலும் வீடு மனை வாங்க பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷ தினங்களிலும் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இத்திருக்கோயில் நெல்லிக்குப்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைந்துள்ளது.
கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவுப் பட்டறை தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று செல்லங்குப்பத்தில் உள்ள கைத்தறி துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து, நடைமுறையில் உள்ள நேரடியாக கூலி வழங்கும் முறையை செயல்படுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியை சேர்ந்தவர் வனத்தையன் மகன் பரிசுத்தராஜா. இவர் நேற்று முன்தினம் மாலை அகரபுத்துார் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிசுத்தராஜா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோழதரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக சுத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (33), அன்பு (33) ஆகியோரை முதுநகா் போலீஸாா் கடந்த ஜன.1-ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் இருவரையும் ஒராண்டு குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை அவர்கள் தலைமையில், 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 71 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1000 காவல்துறையினர் நாளை பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, அலுவலகங்களுக்கும். 13.01.2025 அளிக்கப்பட்ட ஆருத்ரா தரிசன உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக இன்று 01.02.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களும் நாளை (01.02.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.