India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் புகார்கள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் கடலூர் மாவட்டம், வடலூர் போலீசார் தரப்பில், சீமானுக்கு சம்மன் வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
வள்ளலார் நினைவு நாள் மற்றும் தைப்பூச ஜோதி தரிசன திருவிழா நாளை (பிப்.11) நடைபெற உள்ளது. இந்நிலையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறும் அன்று மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும், மீறி மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் வடலூரில் சத்திய ஞான சபை மூலம் சன்மார்க்க கொள்கைகளை விதைத்த வள்ளலார் எனும் ராமலிங்க அடிகள் நினைவு தினம், நாளை மறுநாள் 11ம் தேதி, அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு சார்பில் வெளியான அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு, கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு உள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 1500 ற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என வடலூரில் விழுப்புரம் சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தானே புயல் கடலூர் மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. இதையடுத்து கிராம மக்களுக்கு அரசு புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது பூங்குணம் வி.ஏ.ஓ-வாக பணிபுரிந்த சம்பத் (56) என்பவர் நிவாரண நிதியில் ரூ.4 லட்சம் முறைகேடு செய்தார். இதுகுறித்த வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பத்துக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடலூரைச் சேர்ந்தவர் ரூபா. இவர் இந்திய கடற்படையில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சக கடற்படை பெண் அதிகாரியுடன் இணைந்து, இருவரும் பாய்மர படகில் உலகை சுற்றி வருகின்றனர். இதுவரை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என 21,600 நாட்டிக்கல் மைல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 28.2.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உங்களது நண்பர்களுக்கு இதனை பகிரவும்..
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற 08.02.2025 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
Sorry, no posts matched your criteria.