India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (05/10/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணியிடம்: கடலூர்
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: டிகிரி / ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK HERE
6. பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியவும், கை நிறைய சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.. ஷேர் பண்ணுங்க

திட்டக்குடி அடுத்த இளமங்கலத்தை சேர்ந்தவர் மெக்கானிக் ராஜா (37). இவர் நேற்று பைக்கில் திட்டக்குடி- விருத்தாச்சலம் மாநில நெடுஞ்சாலையில், தர்மகுடிக்காடு மின்சார வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியதில் படுகாயம் அடைந்த ராஜா தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகளாரின் பிறந்த தினம் இன்று (அக்.5) கொண்டாடப்படுகிறது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என பாடிய வள்ளலார், 1865-ல் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்து ஏழைகளின் பசியாற்றினார். மகான் வள்ளலார் அவதரித்த இந்நாளில் வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்.

விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (56). இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டினை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கட்டியிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கனமழை பெய்தபோது மின் கம்பி திடீரென அறுந்து மாடு மீது விழுந்தது. இதில் அந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து விருத்தாசலம் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பக்கிரிப்பாளையத்தை சேர்ந்த பிரபு (42), தனது மனைவியான ஆயுதப்படை போலீஸ்காரர் கோமளாவுடன் (39) சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி 270 பேரிடம் ரூ.33.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் பெண் போலீஸ் கோமளாவை, நேற்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(அக்.3) இரவு 10 மணி முதல் இன்று (அக்.4) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
Sorry, no posts matched your criteria.