Cuddalore

News September 5, 2024

கல்வி நிறுவனகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 31.1.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 5, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு 12.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் தங்களது கோரிக்கை மனுவை இரு பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 4, 2024

கடலூர்: ரோந்துப் பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (04/09/2024) கடலூர் காவல் ஆய்வாளர் தீபா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

கடலூரில் பிஎஸ்என்எல் விற்பனை முகவராக அரிய வாய்ப்பு

image

கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஎஸ்என்எல் சிம் கார்டு மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளின் விற்பனையை மேம்படுத்தும் வகையில் கடலூரில் விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான விபரங்களுக்கு www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 4, 2024

கடலூரில் பிஎஸ்என்எல் விற்பனை முகவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஎஸ்என்எல் சிம் கார்டு மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளின் விற்பனையை மேம்படுத்தும் வகையில் கடலூரில் விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான விபரங்களுக்கு www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 4, 2024

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து

image

திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் விருது பெறும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை கடலூர் மாநகர திமுக செயலாளர் ராஜா நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன்,புகழேந்தி,மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் மூவேந்தன்,பகுதி துணை செயலாளர் கார் வெங்கடேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

News September 4, 2024

கடலூரில் அண்ணன் குத்திக் கொலை: தம்பி கைது

image

விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி செல்வமணி (58). இவருக்கும் இவரது தம்பி சுப்பிரமணியனுக்கும்(55) இன்று இரவு திடிரென குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், செல்வமணியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 3, 2024

கடலூர் மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (03/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வள்ளி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

கடலூரில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடர் கழகம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வேலு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 3, 2024

கண்காட்சியில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

image

சென்னையில் வரும் செப்.21 முதல் 6.10.2024 வரை மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்களை விற்பனைக்கு வைக்க விரும்பினால் 10.9.2024-க்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.