Cuddalore

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

கடலூரில் 36 முதல்வர் மருந்தகங்கள்: ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநிலம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் மருந்தாளுநர்கள் மூலம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அரசு மானியம் மற்றும் கடன் வசதியுடன் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் மருந்தாளுநர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News February 12, 2025

வடலூர்: இன்று அதிகாலை ஜோதி தரிசனம்

image

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று 12 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் 6 ஆம் கால ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று 5 ஆம் கால ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News February 10, 2025

புவனகிரி: டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

image

புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில் சிதம்பரம் புவனகிரி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்ற டாக்டர் மீது மோதியதில் டிராக்டர் மற்றும் லோடு டிப்பர் தனித்தனியே கழண்டு சாலையில் இரு புறங்களிலும் சிதறி பெரும் விபத்து டிராக்டரில் பயணித்த ஐந்து வயது பெண் குழந்தை உயிர் இழப்பு மேலும் பேருந்தில் பயணித்த பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.

News February 10, 2025

கடலூர்: எஸ்.பியிடம் வாழ்த்து பெற்ற காவல் கண்காணிப்பாளர்கள்

image

கடலூர் மாவட்டம் குற்ற ஆவண காப்பகம் துணை காவல் கண்காணிப்பாளராக சார்லஸ் இன்று பொறுப்பேற்று கொண்டார். கடலூர் மாவட்டம் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளராக அப்பண்டைராஜ் பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS யை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News February 10, 2025

மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கிய ஆட்சியர்

image

தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு கடலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் இன்று (10.02.2025) பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் அனு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் பொற்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், தலைமையாசிரியர் இந்திரா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News February 10, 2025

வடலூர்: தைப்பூசத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்

image

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தைப்பூசத்தை முன்னிட்டு 11,12,13 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06147/48 விழுப்புரம் – விருத்தாசலம் -வடலூர் கடலூர் துறைமுகம் சந்திப்பு- வடலூர் -விருத்தாச்சலம் -விழுப்புரம் MEMU. 06133/32 விருத்தாச்சலம் – வடலூர் -கடலூர் துறைமுகம் சந்திப்பு – வடலூர் – விருத்தாச்சலம் MEMU. 8 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட MEMU சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News February 10, 2025

நேரில் ஆஜராக சீமானுக்கு வடலூர் போலீசார் சம்மன்

image

சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் புகார்கள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் கடலூர் மாவட்டம், வடலூர் போலீசார் தரப்பில், சீமானுக்கு சம்மன் வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

டாஸ்மாக் கடைகளை திறந்தால் குற்ற நடவடிக்கை – ஆட்சியர்

image

வள்ளலார் நினைவு நாள் மற்றும் தைப்பூச ஜோதி தரிசன திருவிழா நாளை (பிப்.11) நடைபெற உள்ளது. இந்நிலையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறும் அன்று மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும், மீறி மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

News February 9, 2025

கடலூரில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

கடலூர் வடலூரில் சத்திய ஞான சபை மூலம் சன்மார்க்க கொள்கைகளை விதைத்த வள்ளலார் எனும் ராமலிங்க அடிகள் நினைவு தினம், நாளை மறுநாள் 11ம் தேதி, அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு சார்பில் வெளியான அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!