India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாளை ஆக.25-ம் தேதி, தனது 68-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்றார்.
கடலூர் மாவட்டம், குடிகாடு கிராமத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் இன்று (ஆகஸ்ட் 23) மதில்சுவர் சாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்த கம்பளி மேடு பகுதியைச் சேர்ந்த இளமதி மற்றும் இந்திரா ஆகியோர் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
காட்டுமன்னார்கோயில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் ஜமால் உசேன் (52). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில், அவரது கடைக்கு வந்த 11 வயது சிறுமிக்கு ஜமால் உசேன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஜமால் உசேனை இன்று (ஆகஸ்ட் 23) கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (23/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரச காலத்தில் இந்த எண்களை அழைக்கலாம். அல்லது 100ஐ அழைகவும்.
கடலூர் மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
▶️ குடிநீர் பிரச்சனை – 1800 425 1941
▶️ பெண்கள் பாதுகாப்பு – 1091
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
கடலூரில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபாடி, வாலிபால், செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் சின்னகங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், சாவடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபாடி, வாலிபால், செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் சின்னகங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், சாவடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.