Cuddalore

News March 25, 2024

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பார்வையிட்ட ஆட்சியர்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது
குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்
அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டார். உடன் மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி ஆகியோர் உள்ளனர்.

News March 24, 2024

கடலூரில் 58 பேர் மீது வழக்கு

image

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்ததை கண்டித்து கடலூரில் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் மாவட்ட தலைவர் ஞானராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனுமதியின்றியும், சட்ட விரோதமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 58 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News March 24, 2024

விருத்தாசலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் 

image

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கடலூர் அருகே விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் எளிதாக கோயிலுக்கு சென்றுவர அரசு சிறப்பு பேருந்துகள் இன்று(மார்ச்.24) காலை முதல் விருத்தாசலம் பேருந்து நிலையம் முதல் கொளஞ்சியப்பர் கோவில் வரை இயக்கப்பட்டு வருகின்றது.

News March 24, 2024

கடலூரில் இன்று பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் அறிமுக கூட்டம், கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாமக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்வதோடு கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து வேட்பாளர் அறிமுக கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

News March 24, 2024

வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த துணை மேயர்

image

‘கடலூர் பாராளுமன்ற தொகுதியின் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் எம்.பி-யை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்’ என்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News March 24, 2024

கடலூர் மக்களுக்கு அழைப்பு விடுத்த ஆட்சியர்

image

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தங்கள் வருகைதந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100% வாக்குபதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 24, 2024

கடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு 

image

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதிக்கும் நியமனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வே. மணிவாசகனை (தலைமை ஆசிரியர் ஓய்வு) அக்கட்சியின் தலைவர் சீமான் நியமனம் செய்துள்ளார்.

News March 23, 2024

கடலூரில் விஷ்ணு பிரசாத் அறிவிப்பு

image

தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடலூரில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 23, 2024

கடலூர் மாவட்டத்தில் 181 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

image

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் தேர்தலின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், துப்பாக்கி பயன்படுத்துவோர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தங்கள் பாதுகாப்பு கருதி உரிய அனுமதி பெற்று துப்பாக்கி பயன்படுத்தும் 181 பேர், இன்று போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

News March 23, 2024

கடலூர் அருகே விபத்து.. 40 பயணிகள் தப்பினர்

image

திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).பஸ் டிரைவர். நேற்று இவர் புதுவையில் இருந்து பண்ருட்டி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார்.பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாகூர் ஏரிக்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டது.இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.பயணிகள் பயத்தில் அலறியதில் நடத்துனர் பேருந்தை நிறுத்தினர்.இதனால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.

error: Content is protected !!