India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் ஆயுதப்படை தலைமை காவலர் ஞானமுருகன் சின்னமானூரில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் (மாஸ்டர்) கபடி போட்டியில் பங்கேற்று பெஸ்ட் ஆல் ரவுண்டர் விருது பெற்றுள்ளார். இதையடுத்து விருது பெற்ற ஞானமுருகனை கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் இன்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் இருந்தார்.
கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் அருகே கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் நேற்று சாலா மாதா கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது நிலை தடுமாறி அங்கிருந்த மரத்தில் மோதியது. இதனால் படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேல் சிகிச்சைக்கு வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 2 படுக்கை வசதிகள், வெப்ப பாதிப்புகளுக்கான சிறப்பு வார்டில் 10 படுக்கை தயார் நிலையில் உள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் எழில்தாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிக அளவில் கஞ்சா புழக்கம் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் இந்த தகவலை பரப்பிய பெண்ணாடம் சோழ நகரை சேர்ந்த ரவுடி கார்த்திகேயன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.எனவே இதுபோன்று தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடுவீரப்பட்டு அடுத்த பண்ணை குச்சிப்பாளையம் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சந்திரா (62). இவர் நேற்று அதே பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சந்திரா மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.