India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குறிஞ்சிப்பாடி துணை மின்நிலையத்தில் நாளை(மே 13) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம், பஜார், எல்லைக்கல் பகுதி, கடலூர் மெயின் ரோடு, வளையல் கார மேட்டுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணாடம் அடுத்து அரியராவியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.திருவிழா கடந்த 3ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு அபிஷேகம் இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.பால்குடம் ஊர்வலம்,ஊரணி பொங்கல்,கன்னிமார்கள் தவம் அழித்த நிகழ்ச்சி,கழுகு மரம் ஏறுதல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34, புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 35, விருத்தாசலம் 35 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 35 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 35 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (11/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாத்தா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும்
பள்ளிக்கல்வித்துறை மூலம் கூட்டு தணிக்கை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பள்ளி வாகனங்களை ஆய்வு
செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 440 பள்ளிகளில் இருந்து 16,908 மாணவர்கள் 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். இதில் 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் பாடவாரியாக தமிழில் 2 பேர், ஆங்கிலத்தில் 18 பேர், கணிதத்தில் 926 பேர், அறிவியலில் 267 பேர், சமூக அறிவியலில் 140 பேர் என மொத்தம் 1,353 மாணவ, மாணவிகள் 100/100 மதிப்பெண் பெற்றனர்.
கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை நேற்று மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37, விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 37 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் வீராணம் ஏரி, நாட்டர்மங்கலம் என்னும் ஊரின் அருகில் அமைந்துள்ளது. சென்னைக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏரி கி.மு 907-955 முதலாம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அக்காலத்தில் சாதாரணமான கருவிகளைக் கொண்டு மனிதனால் 14 கிமீ அளவில் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியாகும். இந்த ஏரி வடவார் ஆற்றின் வழியே கொள்ளிடம் ஆற்றிலிருந்து இருந்து தண்ணீர் பெறுகிறது.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இந்துமதி(36), நந்தனா (13), ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடார்பாக போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.