Cuddalore

News April 17, 2024

கடலூர் வழியாக கோவைக்கு தேர்தல் சிறப்பு ரயில்

image

சென்னை எழும்பூரில் இருந்து கடலூர், திருச்சி, பழனி வழியாக கோவைக்கு 2 நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மாலை 4.25க்கு புறப்படும் ரயில் கடலூர் துறைமுகம் சந்திப்பிற்கு இரவு 8.48 க்கு வந்து மறுநாள் காலை 8.20 க்கு கோவை சென்று சேரும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் உத்ராமல் , சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெமின்லதா , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

கடலூரில் வரும் 22ம் தேதி முதல்

image

கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீட்டில் எல்கேஜி சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறையின் இணைய தளத்தில் வரும் 22ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

கடலூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தாசில்தார் பலராமன் கலந்து கொண்டனர். தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

News April 16, 2024

சிதம்பரம் மக்களே ஏப்ரல்-19 காய்கறி மார்க்கெட் விடுமுறை 

image

சிதம்பரம் மேலவீதியில் உள்ள அண்ணா காய்கனி மார்க்கெட் ஏப்ரல்-19 தேர்தல் அன்று பொது விடுமுறை என்பதால் முழு நேரமும் இயங்காது, என காய்கனி வியாபாரிகள் நல சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய் மற்றும் பழங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் வியாபாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

News April 16, 2024

கடலூர்: வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறைகள் ஆய்வு

image

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் நேற்று  பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.

News April 15, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சி நாளை துவக்கம்

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால முதல் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் கடந்த 2-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்நிலையில் 2-ம் கட்ட நீச்சல் வகுப்பு நாளை (16ம் தேதி) துவங்கி 28ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

News April 15, 2024

ஏப்ரல் 18ஆம் தேதி மாரத்தான் போட்டி

image

மக்களவை தேர்தலையொட்டி 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 18ஆம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 18 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் 18-ம் தேதி காலை 5.30 மணிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

தொலைதூர கல்வி தேர்வு

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரம் மற்றும் இணையவழி கல்வி முறையில் 2024 ஆம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவருக்கு தேர்வு விண்ணப்பித்தல் விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது http/https:/coe.annamalaiuniversity.ac.in/bank/examreg.php என்ற தளத்தில் இன்று முதல் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வுக்கான அட்டவணையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2024

கடலூர் அருகே சோகம்

image

சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அரங்கநாதன். லாரி ஓட்டுநரான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அருகில் உள்ள பாசிமுத்தன் உடையில் மீன் பிடிக்க சென்றார். எதிர்பாரத விதமாக நீரில் மூழ்கினார். அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில்  சேர்த்தனர் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!