India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 17, 18, 19-ந்தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இதனால் 3 நாட்கள் கடைகள் திறக்கப்படாது என்பதால், நேற்று கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் ரூ.9.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் நேற்று துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்ற தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் 450, ஆந்திர மாநில காவல்துறையினர் 150, தெலுங்கானா ஊர்காவல் படையினர் 300, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 180 மற்றும் கடலூர் ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் என மொத்தம் 4300 காவல்துறையினர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் எஸ்.பி. ராஜாராம் இன்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை (2024) முன்னிட்டு, வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் நேரில் சென்று வாக்களிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியரும், கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலருமான அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வரும் 19ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 18004253168 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 முதல் வரும் 19ஆம் தேதி இரவு 12 வரை மூடப்படும். மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு பாடலீஸ்வரர் கல்வி கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் சுந்தரி கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.
விருத்தாசலம் முல்லா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி பஞ்சவர்ணம் (40). இவரது மகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்த பஞ்சவர்ணம் நேற்று மாலை தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக காவல்துறையினர் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 225 வாகனங்களில் சுமார் 3,800 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், சேமிப்பு கணக்கு புத்தகம், பணியாளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட 13 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒரு அசல் ஆவணங்களை ஓட்டுச்சாவடிக்கு எடுத்துச் சென்று ஓட்டளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.