India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று கடலூரில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை கடலூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (18/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராதிகா , சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அய்யனார், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் எழில்தாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் சம்சுதீன் மகன் காதர் பாட்ஷா(35). டீ மாஸ்டரான காதர் பாட்ஷா இன்று காலை பண்ருட்டி ரயில் நிலையில் அருகில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ரெயில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அடுத்த உச்சிமேடு சேர்ந்தவர் முத்துக்குமரன் (42) மகன் முகேஷ்(17). முத்துக்குமரன் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதை முகேஷ் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமரன் கத்தரிக்கோலால், முகேஷ் கழுத்தில் குத்தினார். காயமடைந்த முகேஷ் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் முத்துக்குமரனை கைது செய்தனர்.
கடலூர் காவலர் திருமண மண்டபத்தில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி, ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், உடல் உறுப்பு தானங்களில் பெரும்பாலான தானங்கள் நாம் உயிரோடு இருக்கும் போது கொடுக்க முடிவதில்லை. நாம் உயிரோடு இருக்கும்போது அளிப்பது ரத்த தானம் மட்டுமே. அதனால் அனைவரும் ரத்த தானம் செய்யுங்கள் என அறிவுறுத்தினார்.
கடலூர், மஞ்சக்குப்பம், கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனையில் காய்ச்சல் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட ‘நிலவேம்பு கசாயம்’ பொதுமக்களுக்கு இன்று வழங்கப்பட்டது. மேலும் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை கடலூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (17/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் இராஜராஜன், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் துறை ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடத்திய அகழாய்வில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர்கள் செப்பு நாணயங்கள் விஜயநகரப் பேரரசு காலத்தை சார்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தென்பண்ணையாற்றில் ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவித்தனர்
Sorry, no posts matched your criteria.