India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம் நகர போலீசார் நேற்று மாலை மந்தகரை, பூதகேணி பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சிதம்பரம் செங்கட்டான் தெருவைச் சேர்ந்த ராமலிங்க மகன் ரவி(44), பூதகேணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த அன்வர் தீன்(62), நடராஜர் மகன் கணேசன்(41) ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆடூர்அகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (19.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

நடராஜர் கோவில் வழக்கு ஒன்றில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலுக்கு சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில் தற்போது 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனி நபர்களுக்கு தீட்சிதர்கள் விற்பனை செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். கோவிலுக்கு சொந்தமாக தற்பொழுது எவ்வளவு பரப்பளவு நிலம் உள்ளது என்பது குறித்தும் அறநிலையத்துறை தாசில்தார் அறிக்கை அளிக்க ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (20ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது. எனறும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் போலீசார் உடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு தப்ப முயன்ற போது காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து அடிக்கடி வெவ்வேறு இடங்களில் தங்கிய நிலையில் கடலூர் மீனவ கிராமத்தில் பதுங்கி வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரகசியமாக சென்னைக்கு வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், கானூர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல்திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று (18.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் குவிந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

கடலூர் வழியாக தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் வாரத்தில் வியாழன், சனி, திங்கட்கிழமை ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 19ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் (06104) கடலூர் துறைமுகத்திற்கு 8.07 வந்து ராமநாதபுரத்திற்கு மறுநாள் காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 20.9.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ‘நான் முதல்வன் உயர்வுக்குப் படி’ வழிகாட்டி நிகழ்ச்சி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருத்தாசலம் வட்டம், பெரியவடவாடியில் நடைபெற உள்ளது. இதில் உயர்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஊக்குவித்தல், வங்கிக் கடன் மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.