India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சொலாரா தொழிலாளர் விடுதலை முன்னணியின் நிர்வாக பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சங்கத்தின் சிறப்புத் தலைவரும் கடலூர் துணை மேயருமான தாமரைச்செல்வன் தலைமையில் கடலூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொழிற்சங்க தலைவர் ஜெகன், செயலாளர் சுரேஷ்பாபு, பொருளாளர் ராஜா, இணைச் செயலாளர் ஜனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (28/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகர் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி காண முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதில் இன்று சிறப்பு ஒதுக்கீடு பிரிவினர்களுக்கான விளையாட்டு துறை மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் இன்று நடைபெற்றது அது மட்டும் இன்றி வரும் பத்தாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கடலூரில் இன்று வெயிலில் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. வெயிலில் இருந்து சமாளிக்க கடலூர் பகுதி பொதுமக்கள் பழங்கள் மற்றும் ஜூஸ்களை குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடலூர், மஞ்சக்குப்பம் பகுதியில் சாலையோரம் தர்பூசணி பழ வியாபாரம் சூடுபிடித்துள்ளது. 1 கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை இன்று விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடலூர் வில்வ நகரை சேர்ந்த காண்ட்ராக்டர் பாபு இன்று உயிரிழந்தார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் கடலூர் மாநகர் மாவட்ட செயலாளர் மு.செந்தில் கடலூர் நகர உறுப்பினர் கேட்டு கவுன்சிலர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சண்முகம் தெரு, செம்மண்டலம் குண்டு சாலை தெருவில் துவங்கி, அண்ணா மார்க்கெட் சாலையில் இணைகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த தெருவில் மழைநீர் தேங்கி வருவதால் கல்வெர்ட் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, பாலம் கட்டுமான பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக கார், வேன் உள்ளிட்ட போக்குவரத்துகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 38 டிகிரி செல்சியஸ், புவனகிரி 38 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 38 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 39 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 40 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 39 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மணவெளி பகுதியில் மாநகராட்சி ‘சிட்டி கிளீன்’ தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது. இந்த பணிகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் பா.தாமரைச்செல்வன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில், பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை கலந்து கொண்டார்.
கடலூரில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக கோடை மழை விட்டு விட்டு பெய்தது. இதற்கிடையே ரமெல் புயல் காரணமாக கடலூரில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடலூரில் இன்று காலை 7 மணிக்கே சூரியன் சுட்டெரித்தது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதில் இன்று மட்டும் 101.1 டிகிரி வெயில் பதிவானது.
Sorry, no posts matched your criteria.