India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் இராஜராஜன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மஞ்சக்குப்பம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, சித்தா உள்ளிட்ட பிரிவுகளுக்கு இடையே சிறிய அளவிலான டிரைனேஜ் பைப்புகள் இருந்தன. இதனால் அவ்வப்போது அடைப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் பெரிய அளவிலான ராட்சசன் பைப்புகள் பொருத்தும் பணி ஊழியர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கை நாளை சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிச்சாவரம் சிதம்பரத்துக்கு அருகே வங்க கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள சதுநில காடுகள் அல்லது மங்குரோவ் காடுகள் உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகளாகும். இந்த பிச்சாவரம் காடு 2800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.சிறுசிறு தீவாக காட்சியளிக்கும் இக்காடுகளில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான சிற்றினங்கள் வாழ்கின்றன. இக்காடுகளில் சுரபுன்னை மரங்கள் நிறைந்திருக்கின்றன.
சேலத்திலிருந்து தினமும் புறப்பட்ட சேலம் – விருத்தாசலம் பாசஞ்சர் DEMU ரயில் (06122) கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை வரும் 2ஆம் தேதி முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சேலத்திலிருந்து (மாலை 6.30) விருத்தாசலம், ஊத்தங்கால் மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் துறைமுகம் சந்திப்பை வந்தடைகிறது. முன்பு இந்த ரயில் சேலம் – விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூரில் நேற்று அதிகபட்சமாக 97.4 டிகிரி வெப்பநிலை பதிவானது. இந்த சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடலூர் வெள்ளி கடற்கரையில் குளிர்ந்த காற்று வாங்கவும், கடலில் குளித்து மகிழவும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்பாக குளிக்குமாறு அறிவுறுத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆதி மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2ஆம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 16ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைந்தது. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30ஆம் தேதி முதல் மே மாதம் 12ஆம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.
பண்ருட்டி தாலுகா வானமாதேவியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (27). இவர் தனது நண்பர்கள் சரண்ராஜ், அருண்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் இன்று வான்பாக்கம் சாலையில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது . இதில் பலத்த காயமடைந்த சச்சிதானந்தம் உள்ளிட்ட 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு, முதல்வர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.மேலும் விண்ணப்பிக்க மே 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாலை 4 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.