Cuddalore

News June 4, 2024

ELECTION: கடலூரில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 72.28% வாக்குகள் பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் விஷ்னு பிரசாத்(காங்.), அதிமுக சார்பில் சிவக்கொழுந்து(தேமுதிக), பாஜக சார்பில் தங்கர் பச்சானும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

கடலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி கடலூர் எஸ்.பி. ராஜாராம் மேற்பார்வையில் ஏ.எஸ்.பி.க்கள் அசோக்குமார், அர்னால்டு ஈஸ்டர், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 12 டி.எஸ்.பி.க்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் மற்றும், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News June 3, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜுன் 3) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் ஜெரினா , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019 மக்களவைத் தேர்தல் கடலூர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் 1,43,983 (13.86%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விஷ்ணு பிரசாத்தும், அதிமுக – தேமுதிக கூட்டணியில் சிவக்கொழுந்தும், பாஜக – பாமக கூட்டணியில் தங்கர் பச்சானும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?

News June 3, 2024

கடலூர் எஸ்.பி முக்கிய அறிவிப்பு

image

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதனால் கடலூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் தேவனாம்பட்டினம் ஆர்.சி. பாலத்திலிருந்து இடது புறமாக காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் வழியாக மையத்திற்கும், மற்றவர்கள் பாலத்திலிருந்து வலது புறமாக பார்க்கிங் செல்ல வேண்டும் என எஸ்.பி.ராஜாராம் இன்று தெரிவித்தார்.

News June 3, 2024

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை;முழு நிலவரம்!

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜுன்., 2) மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் திட்டக்குடியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News June 3, 2024

கடலூர்:முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்

image

கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லம் உள்ளது. இந்த முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு சமூக ஆர்வலர் மனோஜ் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதியோர் இல்ல நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 2, 2024

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை; முழு நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 38 டிகிரி செல்சியஸ், புவனகிரி 38 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 38 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 41 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 41 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News June 2, 2024

கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சர்வதேச அளவில் நாட்டிற்கு நற்பெயரையும்,புகழையும் பெற்றுத் தந்த விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.இதில் விளையாட்டு துறைக்கான 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது தொடர்பான விவரங்கள் https://.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்

News June 2, 2024

கடலூர் அருகே கோவிலில் சிறப்பு வழிபாடு

image

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று வைகாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!