Cuddalore

News June 4, 2024

சிதம்பரம்: பாய்ந்து செல்லும் திருமா!

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 8 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 1,91,725 வாக்குகளுடன் 30,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 1,61,472 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 62,509 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.

News June 4, 2024

கடலூர் 11-வது சுற்று முடிவு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 11ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -2,75,851, தேமுதிக -1,68,560, பாமக -1,24,704. 1,07,291 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

News June 4, 2024

கடலூர்: 10 சுற்று முடிவு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 10ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -2,52,565, தேமுதிக -1,54,744,
பாமக -1,13,038, நாதக -32,036. 97,821 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

News June 4, 2024

கடலூர்: 1,65,951 வாக்குகளுடன் காங்.,முன்னிலை

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் (இன்று 12.50 மணி நிலவரப்படி) காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சி – 1,65,951, தே.மு.தி.க – 1,02,939, பா.ம.க – 73,023, நா.த.க – 21,010 இதுவரை பெற்றுள்ளது. இந்த நிலையில் காலை முதல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார்‌.

News June 4, 2024

கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

image

கடலூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 177270 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் தேமுதிக 109873 ஓட்டுகளும், பாமக 76359 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 21910 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

News June 4, 2024

கடலூர்: 6ஆம் சுற்று முடிவுகள்

image

கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 6 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலையில் உள்ளார்.

காங்கிரஸ் -153254,தேமுதிக -96459,பாமக -63261,நாதக -18376 வாக்குகள் பெற்றுள்ளனர். விஷ்ணு பிரசாத் 56795 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

கடலூர் வேட்பாளர் 46,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

image

கடலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது‌. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11.45 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 46,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

News June 4, 2024

கடலூரில் தங்கர்பச்சான் தொடர்ந்து 3-வது இடம்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4ஆம் சுற்று முடிவடைந்த நிலையில், 5ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நண்பகல் 12.10 மணி நிலவரப்படி பா.ம.க – 52,371 வாக்குகள் பெற்றுள்ளது. இதையடுத்து கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சான் தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்து வருகிறார்.

News June 4, 2024

கடலூர் 5ஆம் சுற்று முடிவுகள்

image

கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 5 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் -129100, தேமுதிக -83058, பாமக -50820, நாதக -15435 வாக்குகள் பதிவாகியுள்ளது. 46042 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

சிதம்பரம்: 4ஆம் சுற்று முடிவு

image

சிதம்பரம் மக்களவை தொகுதியில் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 43,484 வாக்குகளுடன் 10,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 33,078 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 13,255 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3,371 வாக்குகள் பெற்றுள்ளார்.

error: Content is protected !!