India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் அண்ணாமலை நகர் துணை தபால் நிலையம் உட்பட 36 துணை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஜூன் -5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ஜூலை-5ஆம் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமில் புதிதாக ஆதார் பதிவு செய்தல் ஆதாரத்தை திருத்தம் செய்தல் கைபேசி எண் இணைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், தலைமையில் இன்று மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் மாவட்ட துணை ஆட்சியர்கள் கடலூர் மாவட்ட வங்கியாளர்கள் அதன் முகவர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் வங்கி சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ஆட்சித் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாலஸ்தீனம் பகுதியில் உள்ள ராஃப் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் பின்பு அனைவரும் எழுந்து நின்று இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் ஜெகதீசன் (38). இவரது மனைவி சரண்யா(33). ஜெகதீசன் தினசரி மதுகுடித்து விட்டு வீட்டு செலவுக்கு பணம் எதுவும் கொடுக்காமல் இருந்ததால், அவரிடம் சரண்யா சண்டை போட்டுள்ளார். இதனால் கோபத்தில் ஜெகதீசன் நேற்று தனது வீட்டு கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பையா நகரில் உலக உணவு தினத்தையோட்டி நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கூட்டமைப்பின் தலைவர் பால்கி தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் செயலாளர் வரவேற்றார் சிறப்பு தலைவராக மாநில தலைவர் திருநாவுக்கரசு கலந்து கொண்டார். இதில் சாலையோரம் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுகளை உரிய ஆய்வு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் அண்ணா மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்த ஒரு நபர் திடீரென்று சாலையில் படித்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்த நிலைகளில் தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அவரிடம் விசாரணை செய்தனர். அந்த வாலிபர் மனவளர்ச்சி குன்றியதாக கருதி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலையில்லா இசை பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மனு கொடுக்க வந்திருந்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது கடலூரில் 40க்கும் மேற்பட்ட இசை பள்ளி ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக வேலையில்லாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எங்களுக்கு அனைத்து விதமான தகுதி இருந்தும் வேலை கிடைக்கவில்லை எங்களை பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்கு எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
கடலூரில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது.இதில் கடலூர் பகுதியில் 79.2 மி.மீ, வானமாதேவி 72.8 மில்லி மீட்டர், வேப்பூர் 53 மில்லி மீட்டர், பண்ருட்டி 49 மில்லி மீட்டர், கலெக்டர் அலுவலகம் 62.6 மில்லி மீட்டர், விருதாச்சலம் 32 மிமீ. குப்பநத்தம் 32.8 மில்லி மீட்டர் குடிதாங்கி 42 மில்லி மீட்டர் போன்ற பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மொத்தமாக 586.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர், புதுசத்திரத்தின் கிழக்கே கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது சாமியார்பேட்டை கடற்கரை. இங்கு அதிக அளவில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தென்னை மரங்கள் சூழ்ந்த இந்த கடற்கரைப் பகுதி கிராமங்களில் ஓடைகள் ஓடுவது அதன் அழகை அதிகரிக்கிறது. இங்கு புகழ்பெற்ற ஸ்ரீபின்ன வாழி அம்மன் கோயில் கடற்கரையுடன் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (70). இவரது மனைவி வேம்பு (65 ). கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று அதிகாலை விருத்தாசலம் வயலூர் மேம்பாலத்தில் சென்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருத்தாசலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.