India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜுன் 13) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் இராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் சேத்தியாத்தோப்பில் உதவி ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூரில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடலூருக்கு இன்று வருகைதந்த கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விசிக மாவட்ட செயலாளர் செந்தில், நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகர், சிபிஎம் நகர செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.இதனைத் தொடர்ந்து இன்று அவர் கடலூர் மாநகரத்திற்கு வருகை புரிந்தார்.பின்பு அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்பு திமுக கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு நன்றி கூறினார்.
மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. மீன் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அரசால் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் நாளை முதல் படகுகள் மீண்டும் மீன்பிடிக்க தயாராகி வருகின்றன. இதற்காக வலைகளை படகில் மீனவர்கள் ஏற்றினர்.பின்பு படகில் ஐஸ் கட்டி ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் கே.ஸ்.ராஜா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவாவை இன்று நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாஜி நெய்வேலி நகர செயலாளர் புகழேந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவானது.இந்த நிலையில் நேற்று கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பணி புரியும் மகளிர் விடுதிகள் அரசு உரிமம் பெற்று நடத்த கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் விடுதிகள் அரசு உரிமம் பெறுதல்,உரிமம் புதுப்பித்தலுக்கு அரசு இணையதளம் www.tnswp.comல் பதிவு செய்து நகலை சமர்ப்பிக்க வேண்டும் பதிவு செய்யாமல் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிள்ளை அடுத்த கீழ்அனுபவம் பட்டு பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்தோஷ். சலவை தொழிலாளி. இவர் இறந்து போன தனது தந்தைக்கு கர்ம காரியம் செய்ய நேற்று அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து சந்தோஷ் தாய் அரும்பு கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை உதவி ஆய்வாளர் குப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
Sorry, no posts matched your criteria.