Cuddalore

News July 3, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட படைவீரர் மாளிகையில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் துப்புரவுப் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் பதிவு செய்துள்ள 55 வயதிற்குட்பட்ட கடலூரில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள், கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

image

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மாணவர்களை வரவேற்று இனிப்புகளை வழங்கினார். இதில், அனைத்து துறையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

News July 3, 2024

விளைநிலத்தில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை

image

கடலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளிடம் இருந்து விளைநிலங்களை பாதுகாக்க, நிலத்தின் உரிமையாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலியும், கம்பி வலைகளையும் அமைக்க கூடாது. ஏனெனில் அதில் சிக்கி மனித உயிரிழப்பு அதிகளவில் நிகழ்கிறது. இதை மீறி விளைநிலத்தில் மின்வேலி அமைப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மின்சார துறை மேற்பார்வையாளர் சதாசிவம் எச்சரித்துள்ளார்.

News July 2, 2024

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

image

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நாளை (ஜீலை.3) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் அடையாள அட்டை மற்றும் மருத்துவர் சான்றிதழ் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு பரிசோதனை செய்து சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

image

சிதம்பரம் அருகே வரகூர்பேட்டையில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வழக்கம்போல் இன்று பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

News July 2, 2024

கடலூர்: ஒரே நாளில் 743 மனுக்கள்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீடு, பட்டா, தையல் இயந்திரம், வேலை வாய்ப்பு உள்பட மொத்தம் 743 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்தார்.

News July 2, 2024

சிறுதொழில் தொடங்க கடனுதவி

image

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது. இதனால், கடனுதவி பெற விரும்புபவர்கள் WWW.tabcedco.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News July 2, 2024

கடலூர்: மாணவர்களுக்கான சிறப்பு முகாம்

image

கடலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடலூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு வசதியாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 2, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையினை வழங்கினார். மேலும், விபத்தில் இறந்தவரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.

error: Content is protected !!