Cuddalore

News March 20, 2024

கடலூரில் வரும் 5-ஆம் தேதி ஸ்டாலின் பிரச்சாரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.

News March 20, 2024

கடலூர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

image

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு இன்று காலை வந்த பேருந்துகளில் இருந்த பயணிகளிடம், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில், கடலூர் எஸ்.பி உள்ளிட்டோர் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News March 20, 2024

கடலூர் தேமுதிக-வுக்கு ஒதுக்கீடு..!

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு கடலூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

News March 20, 2024

கடலூர் அருகே ரூ.5000 பறிமுதல் 

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.20) சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகமது கௌஸ் என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கணக்கில் வராத பணம் ரூ.5 லட்சம் இருந்ததால் இதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையில் தனி வட்டாச்சியர் பலராமனிடம் வழங்கப்பட்டது.

News March 20, 2024

கடலூர்: பாஜக அலுவலக திறப்பு விழா

image

பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் பாராளுமன்றத் தொகுதி அலுவலக திறப்பு விழா இன்று கடலூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 20, 2024

சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் விபரம்

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அளித்த ஓட்டு சதவீதம் பற்றி விவரம்: குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றாகிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் 7,49,623 பெண் வாக்காளர்கள் 7,61,206 மூன்றாம் பாலினத்தவர்கள் 86 என மொத்த வாக்காளர்கள் 15,10,915 தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்

News March 20, 2024

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி அறிவிப்பு

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி முறையில் பயின்று டிசம்பர் 2023 தேர்வில் எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளமான https:/coe.annamalai university .ac.in /dde-results.php என்ற இணைய வழி முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக அறிவிப்பு எடுத்துள்ளது

News March 20, 2024

சிதம்பரம்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, சிதம்பரம் எம்பி தொகுதியின் வேட்பாளராக சந்திரகாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 20, 2024

கடலூர்:பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா

image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறையில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் தொடக்க விழா, மகாகவி பாரதியார் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (மார்ச் -19) நடைபெற்றது.
துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.