India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டம் கீழ் புவனகிரி மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் இளம் பெண் புவனேஸ்வரி என்பவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி அவினேஷ், அவந்தா என இரு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வேலு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கம் வழங்கினார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.ஐ. கதிரவன் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு நேற்று டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவின் அளவு 1155.61 மி.மீ ஆகும். ஆனால் தற்போது 2024 ஆம் ஆண்டு மழைப்பொழிவின் அளவு சாதாரணமாக 1206.7 மி.மீ நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சராசரியை தாண்டி இதுவரை 1460.6 மி.மீ அளவு மழை பெய்துள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் களஞ்சியம் 2.0 செயலி மூலம் சம்பள பட்டியல், கடந்த கால சம்பள விபரங்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், பண்டிகை முன்பணம், பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் உள்ளவற்றை தாங்களே சரிபார்த்து கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி நாளை (21.12.2024) சனிக்கிழமை, கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதுஇதில் தகுதி பெறும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 28.12.2024 அன்று விருதுநகரில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

குமராட்சி போலீசார் நேற்று மாலை இளங்கம்பூர் கிராம பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (55) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (டிச- 20) விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

தமிழக அரசு அறிவித்த ஃபெஞ்சல் புயல் வெள்ள நிவாரணம் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையை பாதிக்கப்பட்ட பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தொகுதி முழுவதும் வழங்கக் கோரி பண்ருட்டி எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு விடுபட்ட சுமார் 25000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது.

அம்பேத்கரை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இழிவுபடுத்தி பேசியதாக கூறி அமித்ஷாவை கண்டித்து நேற்று விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக ரூ.2,000, அரிசி-5 கிலோ, துவரம் பருப்பு-1 கிலோ வழங்கப்படும் நிலையில், கூடுதல் நிவாரணமாக சர்க்கரை-1 கிலோ கடலூர், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள 310 நியாயவிலை கடைகளில் உள்ள 1,95,983 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.