India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம் குண்டுசாலையில் ஆட்டோ மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற இருக்கும் திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்திற்கான அரங்க அமைப்புகளை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் நேற்று இரவு ஆய்வு செய்தார்.உடன் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன்,புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன்,பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் பாமக மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், ஜெகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.
சிதம்பரம் அருகே மேல்தவிர்த்தாம்பட்டை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது வீட்டின் அருகில் உள்ள வக்கார மாரி ஏரியில் இருந்து இன்று அதிகாலை வெளியேறிய முதலை ஒன்று செல்வகுமாரின் வீட்டிற்குள் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 8 அடி நீளமுடைய முதலையை லாவகமாக பிடித்தனர்.
கடலூர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்பு அவர் கூறியதாவது, நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எங்களுக்கு முழுமையான மக்கள் ஆதரவு உள்ளது என கூறினார்
கடலூர் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் கலையரசன் மகன் தினகரன் (17). பிளஸ்-2 மாணவரான இவர் தற்போது நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதி உள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச் 24) தனது நண்பர்களுடன் நல்லவாடு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி பலியானார். இதுதொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது
குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்
அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டார். உடன் மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி ஆகியோர் உள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்ததை கண்டித்து கடலூரில் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் மாவட்ட தலைவர் ஞானராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனுமதியின்றியும், சட்ட விரோதமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 58 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கடலூர் அருகே விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் எளிதாக கோயிலுக்கு சென்றுவர அரசு சிறப்பு பேருந்துகள் இன்று(மார்ச்.24) காலை முதல் விருத்தாசலம் பேருந்து நிலையம் முதல் கொளஞ்சியப்பர் கோவில் வரை இயக்கப்பட்டு வருகின்றது.
Sorry, no posts matched your criteria.