Cuddalore

News July 22, 2024

இடைநிலை ஆசிரியர் தேர்வில் 849 பேர் பங்கேற்பு

image

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவதற்கான நேரடி நியமன போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 892 பேர் விண்ணப்பித்திருந்தனர். 3 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 849 பேர் எழுதினர். 43 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News July 22, 2024

நாளை மின்தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர்,அடரி, ஒறையூர் துணைமின் நிலையங்களில் நாளை(ஜூலை.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லாத்தூர்,அடரி, ஒறையூர் துணைமின் நிலையங்களுக்குட்டப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 21, 2024

கடலில் மூழ்கி 2 ஐ டி ஊழியர்கள் உயிரிழப்பு

image

சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரைக்கு இன்று சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஐ டி நிறுவனத்தில் பணிபுரியும் ஷாம் சுந்தர் (26), கோகுல் பிரசாத் (26) ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதையடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

News July 21, 2024

கடலூரில் ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

image

கடலூர் அஞ்சல் துறையில், கிளை போஸ்ட் மாஸ்டர், டாக் சேவாக் உள்ளிட்ட 120 காலிப் பணியிடங்கள் உள்ளன. 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் ஆக.5ஆம் தேதிக்குள் <>indiapostgdsonline.gov.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

News July 21, 2024

மூவரை கொலை செய்த இளைஞர் ஆஸ்பத்திரியில் அனுமதி

image

காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி, மகன் சுகந்தகுமார், பேரன் நிஷாந்த் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக, சங்கர் ஆனந்த் (21), ஷாகுல்அமீது (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யும்போது நடந்த தாக்குதலில், சங்கர் ஆனந்தின் இடது கை ஆள்காட்டி விரல் துண்டானது. இதனால், அவரை நேற்றிரவு போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News July 20, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (20/07/2024) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News July 20, 2024

3 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஏ.டி.ஜி.பி. ஆலோசனை

image

தமிழகத்தின் ஏ.டி.ஜி.பி.யாக சமீபத்தில் பொறுப்பேற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று கடலூரில் எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது 3 மாவட்டங்களிலும் சவாலாக இருக்கும் புதுவை மாநில மதுபானங்கள் கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து மூன்று மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

News July 20, 2024

ரௌலட்டட் வகை பானை ஓடுகள் கண்டெடுப்பு

image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 8 குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் சூழலில் நேற்று நடைபெற்ற அகழாய்வில் ரெளலட்டட் வகை பாளையங்கோடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த பானையோடுகள் சங்க காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News July 20, 2024

15 நாட்கள் நீதிமன்ற காவல்

image

கடலூர்,காராமணிக்குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல்கள் தீவைத்து எரிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை எற்படுத்தியது.குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் சங்கர் ஆனந்த்,சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News July 20, 2024

மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு – ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட 141 ஆவது ஆட்சியராக பொறுப்பேற்ற சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று நிருபர்களை சந்தித்தார். அதில் அடிப்படை வசதி, கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பேன். தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல அயராது உழைப்பேன் என கூறினார்.

error: Content is protected !!