India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பருவமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் பணி நாளாக நாளை (11.01.2025) சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் நாளை (11.01.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டும் என கடலூர் முதன்மைக் கல்லி அலுவலர் தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக 04142-220700 என்ற எண்ணிற்கு விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் நந்தனார் அரசு ஆதிதிராவிட பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கலெக்டர் நேற்று பாராட்டு தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துடன் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் அறிவுத்திறன், சுகாதாரம் உள்ளிட்டவைகளில் அடிப்படையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளியாக சிதம்பரம் நந்தனார் அரசு திராவிடர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மகாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன விடுதலை அரசியல் என்று இது நாள் வரை நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான இனிமையான பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்கிறேன். இன்றோடு நாதகவில் இருந்து விலகுகிறேன். இது நாள் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. 15 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இந்த முகாமில் 10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்வோர் தங்கள் கல்வி சான்றுகள், அடையாள அட்டைகளுடன் வருமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். SHARE IT.

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 11.1.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

“ஸ்க்ரப் டைபஸ்” என்ற உன்னி காய்ச்சல் நோயால் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில், 594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உன்னி பூச்சிகள் புதர் மண்டிய பகுதி மற்றும் அதிகமான செடி, கொடிகள் நிறைந்த பகுதிகளில் காணப்படும். விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதியில் அருகே வசிப்போர், மலை ஏற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணி பெண்கள் இந்த பூச்சி கடிக்கு ஆளாகின்றனர்.

கடலூர் மாவட்ட தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவிலிருந்து மதுவிலக்கு வழக்குகளில் 4 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வரும் 23ஆம் தேதி கடலூர் ஆயுதப்படை வளாக எஸ்.ஆர்.ஜே திருமண மண்டபத்தில் ஏலம் விடப்படுகின்றன. விவரங்களை நேரில் அறியலாம் என கடலூர் எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று காலை 9 மணிக்கு கடலூர் டவுன்ஹாலில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்க உள்ளார். பின்னர் காலை 9.30 மணிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை புதுப்பாளையத்தில் வழங்கி துவக்கி வைக்க உள்ளார். மாலை 4 மணிக்கு கடலூர், நத்தப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறந்து வைக்க உள்ளார்.

கடலூர் முதுநகர் சான்றோர்பாளையம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சங்கர் (34) கடந்த 1ஆம் தேதி இரவு சுத்துக்குளம் பகுதியில் மர்மநபர்கள் இருவரால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ் (33), அன்பு (33) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.