India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல் கொள்முதலில் ஏற்படும் புகார்களை விவசாயிகள் தெரிவிக்க தொலைபேசி எண்ணை கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். அதன்படி 04142-220700 என்ற எண்ணில் நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, விவசாயிகள் கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி (அ) அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்தவர்கள், பிப்.28ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மாலை தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீசார் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு அளித்தனர். சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய உடை போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள 1 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்- சிறுமிகள் பாரம்பரிய உடை அணிந்த புகைபடங்களை படத்தில் உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து வருகிற 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்

கடலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (15.01.2025) மற்றும் குடியரசு தினம் (26.01.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபானக் கடைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கூடங்கள்இயங்க தடை விதிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், ரத்தப்பட்டு ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு இன்று (ஜன.11) ஊராட்சி மன்ற செயலாளர் சரவணன் தலைமையில், 100 நாள் வேலை பணியாளர்கள் அனைவரும் ஓரே சீருடையில் சமத்துவப் பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிகழ்வில் பணித்தள பொறுப்பாளர் கௌசல்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். உடன் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர் ராவ், ஆர்பிஐ உதவி தலைமை மேலாளர் ஸ்ரீதர், நபார்டு உதவி தலைமை மேலாளர் சித்தார்த்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (எல்டிஎம்) அசோக்ராஜா உட்பட பலர் உள்ளனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படாமலுள்ள 1078 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் அரசு வழிகாட்டுதலின்படி உரிய முறையில் விண்ணப்பித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்கு தொகையை செலுத்தி குடியிருப்பினை பெற்று பயடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது, பக்தர்களின் அமைதியான தரிசனத்துக்கும், பொது தீட்சிதர்களின் பாரம்பரியமான வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்திட காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 34 இடங்களிலும், ஸ்ரீமுஷ்ணம் 42, விருத்தாசலம் 32, சிதம்பரம் 25, திட்டக்குடி 33, புவனகிரி 24, குறிஞ்சிப்பாடி 9, வேப்பூர் 12, கடலூர் 15, பண்ருட்டியில் 9 இடங்களிலும் என மொத்தம் 235 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.