Cuddalore

News April 7, 2024

கடலூர்: தம்பதியினர் மரணம்.. உயிர்தப்பிய குழந்தை

image

கடலூர் மாவட்டம் அருகே களத்தூரில் இருசக்கர வாகனம் மீது கர்நாடக பதிவெண் கொண்ட சொகுசு கார் மோதியதில் ராஜதுரை(29). நான்கு மாத கர்ப்பிணி பெண் மதுமதி(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் உயிர்தப்பிய 2 வயது குழந்தை புகழ், படுகாயங்களுடன் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

News April 7, 2024

கடலூர்: பிரேமலதா விஜயகாந்த் வருகை

image

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஏப்ரல்.7) கடலூருக்கு வருகிறார். பின்னர் அவர், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்தில் ஆதரவு கேட்டு மாலை 4 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பின்னர் நெல்லிக்குப்பம், பண்ருட்டிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1 <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

கடலூர்: வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையை கலெக்டர் ஆய்வு

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு அறையை நேற்று மாலை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News April 6, 2024

கடலூர்:சிறுமி கர்ப்பம்; வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

image

கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கடலூர் மகளிர் போலீசில் நேற்று (ஏப்ரல் 5) மாலை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனை நேற்று இரவு கைது செய்தனர்.

News April 6, 2024

முதலமைச்சர் வருகை திடீர் மாற்றம்.

image

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எம்.எல்‌.ஏ புகழேந்தி உடல்நலகுறைவால் இன்று உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் வருகை தருவதாக கூறப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நாளை அவரது இல்லத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். என்று கூறப்பட்டுள்ளது.

News April 6, 2024

தேசிய கொடி ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

100% வாக்குப்பதிவு வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு தேசியக் கொடியை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஏராளமான கலந்துகொண்டு கயிறு தேசிய கொடியை ஏந்தி நாடாளுமன்றத் தேர்தலில் 100%வாக்களிப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 6, 2024

கடலூர்: பதற்றமான வாக்குச்சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

கடலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 119 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்,11 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.மேலும் சிதம்பரம் தொகுதியில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்,7 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

கடலூர் வந்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு நேற்று இரவு 9.45 மணிக்கு கடலூர், ஜட்ஜ் பங்களா சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் முதல்வர் தங்கினார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News April 6, 2024

கடலூர் மீன் அங்காடியில் நா.த.க-வினர் வாக்கு சேகரிப்பு

image

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்திற்கு ஆதரவாக கடலூர், மஞ்சக்குப்பம் மீன் அங்காடி மற்றும் கடைத்தெரு பகுதிகளில் பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரித்தனர்.