India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் ஆள்பேட்டை பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ஆனந்தி தலைமையில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் உரிய ஆவணம் இன்றி ரூ. 8 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பொருட்களை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா பார்வையிட்டார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சந்திரகாசனை ஆதரித்து இன்று மாலை 5 மணி அளவில் சிதம்பரம் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் கடலூர் மேற்கு மாவட்டம், கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான செலவினங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் வங்கி இணையதளம் மூலம் சந்தேகத்திற்கிடமான பணபரிவர்த்தனைகள் மற்றும் அதிக அளவிலான பணப்பரிவர்த்தனைகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கடலூரில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாம் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
எனவே கடலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராதிகா , சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜராஜன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் அருகே பாறையூரில் வசிப்பவர் மாதேஸ்வரன். குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இவர் ,இன்று அதிகாலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள வாட்டர் டேங்க் பில்லரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு, சொரக்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் சாலை ஓரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில் 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபாஷிணி ராஜா முயற்சியில் 22-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் இன்று அகற்றப்பட்டது.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேட்பாளர்களின் பெயர், சின்னம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
கடலூர் தாலுகா அலுவலகத்தில் கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 227 வாக்குச்சாவடி மையங்களுக்கு 584 வாக்குச்சாவடி இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் கடலூர் தாலுகா அலுவலகத்தில் 8 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.
கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வரும் 13 ஆம் தேதி அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து அரங்கில் 18 வயதிற்குட்பட்ட இருபாலின வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கடலூர் மாவட்ட அணி சார்பாக கலந்து கொள்வார்கள் என கூடைப்பந்து சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.