India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ‘டானா’ புயலாக வலுவடைந்து பின்னர் தீவிர புயலாக மாறும். பின்னர் புயல் அக்.25ஆம் தேதி அதிகாலை ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையைக் கடக்கும். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் இன்று (அக்-23) 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் மாவட்ட அளவில் 23 வயதுக்குட்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கான அணி தேர்வு வரும் 27ஆம் தேதி மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் 01/01/2002 அன்றோ அதற்குப் பிறகோ பிறந்தவர்கள் பங்கேற்கலாம். கடலூர் மாவட்டத்தினர் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என கடலூர் மாவட்ட வாலிபால் கழக செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கணக்கு உதவியாளர்-1 மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்-2, வார்டு மேலாளர் (Ward manager) பணியிடத்திற்கு பணிபுரிய தகுதியுடைய நபர்கள் 28.10.2024-க்குள் கடலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரை நேரடியாக அணுகி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர அறிவித்துள்ளார்.
திட்டக்குடி பாசிகுளத்தை சேர்ந்த ஏழுமலை (35) என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் மனமுடைந்த அந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து ஏழுமலையை கைது செய்தனர். இந்த வழக்கில் இன்று ஏழுமலைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று (அக்.22) கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்தவர்களில் 24 பேருக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 145 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் ரூ.5 லட்சம் குறைந்த வட்டியில் கடனாக வழங்குகிறது. இதற்கு www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கம் கடலூர் மாவட்டம், வடலூரில் 23.10.2024 அன்று காலை 10.30 மணி முதல் 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றவுள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்தார்.
நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று (21.10.2024) காலை 8.30 மணி நிலவரப்படி நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக் கல்லூரிகளில் மாற்றுப் பணி அடிப்படையில் அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது என அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன், பொதுச் செயலர் .சுரேஷ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.