India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு தினம் தோறும் மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்.,25) மணிலா வரத்து 8.79 மூட்டை, நெல் (ஐ.ஆர்-50) வரத்து 3.38 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த விளை பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
கடலூர் மாவட்டம் நல்லூரில் உள்ள சாந்தி மஹாலில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலா் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சசிதரன், சம்சத்பேகம், வருவாய் ஆய்வாளர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் விடிய விடிய ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை 4 மணிக்கு துவங்கிய ஆட்டுச் சந்தை இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த சந்தையில் வெள்ளாடு, குறும்பாடு, கொடியாடு, மாலாடு என பல்வேறு வகையான ஆடுகள் ரூ. 5ஆயிரம் முதல் ரூ. 37 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த பரவளூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (42), வெற்றிவேல் (30), ராம்பிரகாஷ் (35), ராஜா (33), ஆதிமூலம் (37), தமிழ்மணி (32) ஆகியோர் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கினர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து ஆனந்த் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கில் நேற்று நீதிபதி விஜயகுமார், 6 பேருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இன்று சிறுகாட்டூரில் உள்ள ராஜன் வாய்க்கால் கொள்ளிடக்கரையோரம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகள் கடத்தி வந்த அல்லியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (38), ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் (28), கருணாகர நல்லூரை சேர்ந்த முருகன் (34) ஆகியோரை கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள்/ நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், 3.12.2024 அன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் 28.10.2024 அன்று பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
வேப்பூர் அடுத்த மாளிகைமேட்டை சேர்ந்தவர் செல்வம் மகன் அஸ்வின் (14). செல்வம் குடும்பத்துக்கும், பக்கத்தில் வசிக்கும் வெங்கடேசன் மனைவி பிரியா(23) குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது. இந்த விரோதம் காரணமாக பிரியா, அஸ்வினை உருட்டுகட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஸ்வின், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிந்து பிரியாவை கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் திடலின் அருகே சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (2310.2024) மாலை 6 மணி அளவில் பட்டாசு விற்பனையினை துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
சீர்காழி எலந்தூரை சேர்ந்த முகிலன் 33 என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி வினோதா நண்பர்கள் விஜயபாஸ்கர், பரத் கிஷோர் ஆகியோருடன் காரில் சென்னையிலிருந்து சீர்காழி சென்றபோது, பரங்கிப்பேட்டை அருகே பெரிய குமட்டி கிலியாளம்மன் கோயில் எதிரே இன்று காலை அதே வழியில் மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்னால் மோதியதில் முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேரும் உயிர் தப்பினர்.
Sorry, no posts matched your criteria.