India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் இன்று (16.12.2024) துவங்கி தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறவுள்ளது. கோமாரி நோய், கலப்பின மாடுகளையே அதிகம் தாக்கும். இந்நோயால் இறப்பு குறைவாக இருந்தாலும், பால் உற்பத்தி குறையும். எனவே கோவையில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு, தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வட்டமலை பாளையம் கங்கா செவிலியர் கல்லூரியின் இளங்கலை பட்டம் பெற்ற 300 மாணவ, மாணவிகளுக்கு எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் டாக்டர்.நாராயணசாமி பட்ட சான்றுகளை வழங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, பேசிய அவர் நோயாளிகளுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதி மருத்துவ சேவை செய்ய வேண்டும். உலகம் முழுவதும் செவிலியர்கள் தேவை அதிகமாக உள்ளது என்றார்.
கோவையில் நாளை(17.12.24) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மருதூர், பவானி பேரேஜ், கவுண்டம்பாளையம், நல்லம்பாளையம் பீடர், சாய்பாபா காலனி பீடர், இடையர்பாளையம் பீடர், சேரன் நகர் பீடர், சங்கனூர் பீடர் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கோவை கொடிசியா சாலை அருகில் உள்ளம், கோவை மண்டல அறிவியல் மையத்தில், கணித திறனறித் தேர்வு (05.01.2025) அன்று நடைபெற உள்ளது. இதில் 5 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் வருகின்ற (20.12.2024) தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 85239-09178 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, காரமடையை அடுத்த புங்கம்பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு, இன்று முன்னாள் ஆசிரியர் சுப்பிரமணியன், தனது டூவீலரில் சென்று விட்டு, காரமடைக்கு திரும்பியுள்ளார். அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில், சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம்-கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாராந்திர ரயில் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமைகளில் மாலை தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் தாம்பரம்-கோவை வாராந்திர ரயில் மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும் என்றனர்.
கோவை மாவட்டத்தில் பெய்த மழையால் மட்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரியில் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பெய்த மழையின் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் நீர்மட்டம் விவரம் பில்லூர் 81.5 100 அடி மணி 42.28, 49.53 அடி ஆழியார் 112.60 120 அடி சோலையார் 138.49 165 அடி பவானி 99.21 105 அடி பரம்பிக்குளம் 67.517 கொள்ளளவு என்று உயர்ந்துள்ளது.
சேலம் மண்டல நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், ரயில் பெட்டிகளின் இருப்பு இல்லாததால் தன்பாத் – கோவை வாராந்திர சிறப்பு ரயில் வரும் 18, 25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் கோவை – தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 21, 28 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
கோவை மாநகர், மாவட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, கஞ்சா, ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.நேற்று பி.கே.புதூர் சுற்றுப்பகுதிகளில் மாணவர்கள் தங்கியுள்ள வீடு, அறைகளில் அதிகாலை, 5:30 மணி முதல், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், தங்கம் தலைமையில், 20 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கனமழையால் மலை ரயில் சேவை கடந்த டிச.13,14 ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, தண்டவாளம் சேதவடைந்துள்ளது. சீரமைப்பு பணி காரணமாக டிச.15,16,17 உள்ளிட்ட 3 தினங்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.